டிரெய்னராக துவங்கி, ஹிந்துஸ்தானின் முதல் சிஇஓவாகும் பெண் – யார் இந்த பிரியா நாயர்

India’s Corporate Success Story : ஒரு டிரெய்னியாக தனது பயணத்தைத் தொடங்கி, ஹிந்துஸ்தான் யூனிலீவரின் முதல் பெண் CEO என்ற பதவியை அடைந்துள்ளார் பிரியா நாயர். ஹிந்தூஸ்தான் நிறுவனத்தில் பல்வேறு துறைகளில் 35 ஆண்டுகள் பணியாற்றி இந்த நிலையை அவர் அடைந்திருக்கிறார்.

டிரெய்னராக துவங்கி, ஹிந்துஸ்தானின் முதல் சிஇஓவாகும் பெண் - யார் இந்த பிரியா நாயர்

மாதிரி புகைப்படம்

Updated On: 

16 Jul 2025 21:47 PM

இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் (Hindustan Unilever Limited) தனது அடுத்த தலைமை செயல் அதிகாரி (CEO) மற்றும் மேனேஜிங் டைரக்டராக (MD) பிரியா நாயர் என்பவரை நியமித்திருக்கிறது. இவர் இந்த நிறுவனத்தின் முதல் பெண் தலைமை செயல் அதிகாரி என்ற பெருமையை பிரியா நாயர்  அடைந்திருக்கிறார்.  இவருக்கு இந்த பதவி அவ்வளவு எளிதில் கிடைக்கவில்லை. அவர் இந்த நிறுவனத்தின் டிரெயினராக வேலைக்கு சேர்ந்திருக்கிறார். அங்கிருந்து தனது திறமையாலும், கடின உழைப்பாலும் அவர் இந்த நிலைமையை அடைந்திருக்கிறார். பிரியா நாயர், வருகிற ஆகஸ்ட் 1 முதல் நிறுவனத்தின் சிஇஓ மற்றும் எம்டியாக பொறுப்பேற்கவிருக்கிறார். பிரியா நாயர் பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக இருக்கிறார். அவரது வாழ்க்கை பயணம் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

டிரெய்னியாக துவங்கிய பிரியா நாயர்

தற்போது 53 வயதாகும் பிரியா நாயர், கடந்த 1995 ஆம் ஆண்டு சிம்பயோசிஸ் இன்ஸ்டியூட் ஆஃப் பிசினஸ் மேனேஜ்மென்ட் கல்லூரியில் எம்பிஏ முடித்திருக்கிறார். அதன் பிறகு அவர் ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிட்டெட் நிறுவனத்தில் மேனேஜ்மென்ட் டிரெயினியாக பணியில் சேர்ந்திருக்கிறார். இதன் பிறகு தொடர்ந்து 35 ஆண்டுகளாக அந்நிறுவனத்தின் ஹோம் கேர், பெர்சனல் கேர் உள்ளிட்ட பிரிவுகளில் முக்கிய பொறுப்புகளை வகித்திருக்கிறார்.

இதையும் படிக்க : 70 முறை நிராகரிப்பு…. ரூ.6,700 கோடி மதிப்பில் நிறுவனம் – ரேபிடோ நிறுவனர் ஜெயித்த கதை

பிரியா நாயர் வகித்த பதவிகள்

கடந்த 2014 ஆம் ஆண்டு ஹோம் கேர் பிரிவில் செயல் இயக்குநராக நியமிக்கப்பட்டார். அங்கே அவர் தனது செயல்திறன் மூலம் சிறப்பான இடத்துக்கு கொண்டு சென்றார். இதன் பிறகு கடந்த 2020 ஆம் ஆண்டு அவருக்கு பியூட்டி அண்ட் பெர்சனல் கேர் பிரிவில் தலைவர் பதிவி வழங்கப்பட்டது. அங்கு தனது திறமையினால் பிராண்டின் வளர்ச்சிக்கு புதிய வடிவம் அளித்தார். இதன் காரணமாக அவர் உலக அளவில் நிறுவனத்தின் முதன்மை மார்க்கெட்டிங் ஆஃபிசராக பதவி உயர்வு கிடைத்தது.

இதையும் படிக்க: 45 வயதில் ரூ.4.7 கோடியுடன் ஓய்வுபெறும் நபர் – அவரது உறவினர் பகிர்ந்த சீக்ரெட்!

கேன்ஸ் விருது வென்று சாதனை

கடந்த 2014 ஆம் ஆண்டு பிரியாவின் தலைமையில் உருவான கன் கஜுரா தேசான் என்ற மொபைல் மார்க்கெட்டிங் திட்டத்தின் மூலம் கேன்ஸ் இண்டர்நேஷனல் ஃபெஸ்டிவல் கிரியேட்டிவிட்டி விழாவில் மூன்று கோல்டு லயன் விருதுகளை வென்று சாதனை படைத்தார். இதன் மூலம் தனது நிறுவனத்துக்கு உலக அளவில் அங்கீகாரம் பெற்றுத்தந்தார்.

தற்போது ஹிந்தூஸ்தான் நிறுவனத்தில் சிஇஓவாக உள்ள ரோகித் ஜாவாவின் பதவிகாலம் ஜூலை 31, 2025 அன்றுடன் முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து சிஇஓவாக பிரியா நாயர் பதவியேற்கவுள்ளார். இவரது பதவி காலம் 5 ஆண்டுகள் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் ஹிந்தூஸ்தான் யூனிலீவர் லிமிட்டெட் நிறுவனத்தின் பங்குகள் 5 சதவிகிதம் உயர்ந்துள்ளன.