60 வயதில் எடுத்த முக்கிய முடிவு… இன்று 93 வயதில் இந்தியாவின் கோடீஸ்வரர்களில் ஒருவர் – யார் இந்த இவர்?

Success Story: வாழ்க்கையில் சாதிக்க வயது ஒரு தடையில்லை என்பதை மீண்டும் ஒருமுறை அழுத்தமாக நிரூபித்திருக்கிறார் லக்ஷமன் தாஸ் மிட்டல். எல்ஐசி ஏஜெண்டான இவர் 60 வயதில் எடுத்த ஒரு முடிவு, இன்று 93 வயதில் இந்தியாவின் கோடீஸ்வரர்களில் ஒருவராக மாற்றியிருக்கிறது.

60 வயதில் எடுத்த முக்கிய முடிவு... இன்று 93 வயதில் இந்தியாவின் கோடீஸ்வரர்களில் ஒருவர் - யார் இந்த இவர்?

Lachhman Das Mittal

Published: 

03 Apr 2026 16:44 PM

 IST

பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும்போது திடீரென வேலையில் இருந்து ஓய்வு நெருங்கும்போது வாழ்க்கையே முடிந்து விட்டதாக பலரும் நினைக்கிறார்கள். ஆனால் ஓய்வு என்பது முடிவு அல்ல, அது வாழ்க்கையின் புதிய தொடக்கம் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் லக்ஷமன் தாஸ் மிட்டல். இவர் சாதாரண எல்ஐசி ஏஜெண்டாக வாழ்க்கையை தொடங்கிய இவர், இன்று 93 வயதில் இந்தியாவின் வயது முதிர்ந்த கோடீஸ்வராக மாறியிருக்கிறார். அவர் வாழ்க்கையில் எதிர்கொண்ட சவால்கள் வெற்றி ஆகியவை குறித்து விரிவாக பார்க்கலாம்.

கடந்த 1955 ஆம் ஆண்டு லக்ஷமன் தாஸ் மிட்டல் தனது வாழ்க்கையை ஒரு லைஃப் இன்சூரன்ஸ் ஆஃப் கார்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் முகவராக தொடங்கினார். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த அவர் கட்டுப்பாடான வாழ்க்கை முறையையும் சேமிப்பு பழக்கத்தையும் கடைபிடித்து வந்தார். கல்வியிலும் சிறந்து விளங்கிய அவர் முதுகலையில் ஆங்கில பாடத்தில் அதிக மார்க்குகள் வித்தியாசத்தில் தேர்ச்சி பெற்று தங்கப்பதக்கம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : வீட்டுக்கடனுக்கு வட்டியை தவிர்க்க வேண்டுமா? கைகொடுக்கும் SIP முதலீடு – எப்படி தெரியுமா?

ஆனால் அவர் தனது ஆரம்ப காலத்தில் சந்தித்த சவால்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. ஒரு பக்கம் எல்ஐசி ஏஜெண்டாக வேலை பார்த்த போதே, மற்றொரு பக்கம் வேளாண் கருவிகள் விற்பனை செய்யும் தொழிலில் முதலீடு செய்தார். ஆனால் அதில் அவர் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேர்ந்தது. ஆனால் அவர் துவண்டு விடவில்லை. மீண்டும் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற முனைப்பில் உறுதியுடன் தனது பயணத்தை தொடர்ந்தார்.

93 வயதில் இந்தியாவின் கோடீஸ்வரர்களில் ஒருவர்

தனது 60 வயதில் வேலையில் இருந்து ஓய்வு பெறும் போது தனது வாழ்க்கையின் முக்கிய முடிவை எடுத்தார். கடந்த 1996 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற பிறகு தனது சேமிப்பை வைத்து சோனாலிக்கா குரூப் என்ற நிறுவனத்தை தொடங்கினார்.  இந்த நிறுவனத்தின் மூலம் டிராக்டர்கள் உள்ளிட்ட விவசாய பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை தொடங்கினார்.

இந்த ஒரு முடிவு அவரது வாழ்க்கையை முழுமையாக மாற்றியது. இந்த நிலையில் இன்று சோனாலிக்கா குரூப் உலகின் பல்வேறு நாடுகளில் தொழிற்சாலைகள் அமைத்து 120க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தனது தயாரிப்புகளை ஏற்றுமதி செய்கிறது. பஞ்சாப் மாநிலத்தில் ஹோஷியார்பூரில் உள்ள அதன் முக்கிய தொழிற்சாலை அவரது முயற்சிக்கும் உழைப்புக்கும் சான்றாக திகழ்கிறது.

இதையும் படிக்க : இனி அக்கவுண்ட் நம்பரை மாற்றாமல் வங்கியை மட்டும் மாற்றலாம் – ஆர்பிஐயின் புதிய திட்டம்

கடந்த 2024 ஆம் ஆண்டு ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட் பட்டியலில் இடம் பெற்ற அவர், சுமார் 4.8 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சொத்துகளை கொண்டவராக அறியப்படுகிறார். இந்த 93 வயதிலும் தனது நிறுவனத்தின் வளர்ச்சியில் தொடர்ந்து உழைத்து வருகிறார். அவரது மகன்கள் அம்ரித் சாகர் மிட்டல் மற்றும் தீபக் மிட்டல் தங்களது தந்தையின் தொழிலை உலக நாடுகளுக்கும் விரிவு படுத்தியுள்ளனர்.

லக்ஷ்மன் தாஸ் மிட்டலின் வாழ்க்கை நமக்கு சொல்வது ஒன்ரு தான். வெற்றிக்கு வயது தடை இல்லை, உறுதியான மனமும் முயற்சியும் இருந்தால் வாழ்க்கையின் எந்த கட்டத்திலும் சாதிக்க முடியும். அதற்கு இவரது வாழ்க்கை மிகச்சிறந்த உதாரணம்.

Follow Us
தன்னை கடித்த பாம்பை தைரியமாக பிடித்த முதியவர்
கேர்ள் ஃபிரெண்டுடன் லூட்டி அடிக்கும் குரங்கு - வைரல் வீடியோ
தன் உயிரையும் பொருட்படுத்தாமல் நாயை காப்பாற்றிய பெண்.. இணையத்தில் வைரல்..
தாயின் பக்கெட் லிஸ்டை நிறைவேற்றிய மகன்... இணையத்தில் வைரல்..