2026-ல் உங்கள் கிரெடிட் ஸ்கோரை பாதுகாக்க இவற்றை பின்பற்றுங்கள்.. முக்கிய டிப்ஸ்!

Tips To Maintain Credit Score | வங்கிகளில் கடன் வாங்க வேண்டும் என்றால் கிரெடிட் ஸ்கோர் மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. இந்த நிலையில், 2026-ல் உங்கள் கிரெடிட் ஸ்கோரை நல்ல முறையில் பாதுகாக்க இந்த சில விஷயங்களை கட்டாயம் பின்பற்றுங்கள்.

2026-ல் உங்கள் கிரெடிட் ஸ்கோரை பாதுகாக்க இவற்றை பின்பற்றுங்கள்.. முக்கிய டிப்ஸ்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

02 Jan 2026 14:39 PM

 IST

வங்கிகளில் கடன் வாங்க வேண்டும் என்றால் அதற்கு ஆவணங்கள் எவ்வளவு முக்கியமோ அதே அள்வுக்கு மிகவும் முக்கியமான் ஒன்றுதான் கிரெடிட் ஸ்கோர் (Credit Score). இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ஆவ்ணங்களை விடவும் முக்கியமான இடத்தை தான் கிரெடிட் ஸ்கோர் கொண்டுள்ளது. காரணம் கிரெடிட் ஸ்கோரின் அடிப்படையில் தான் ஒருவருக்கு கடன் வழங்க வேண்டுமா, இல்லையா என்பதை வங்கிகள் முடிவு செய்யும். இந்த நிலையில், குறைவான கிரெடிட் ஸ்கோர் கொண்டுள்ளவர்களுக்கு கடன் வழங்க வங்கிகள் முன்வராது. என்வே கிரெடிட் ஸ்கோரை முறையாக பராமரிக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

முறையாக கடனை திருப்பி செலுத்துவது

இதுவரை நீங்கள் வாங்கிய கடன்களை முறையாக திருப்பி செலுத்தியுள்ளீர்களா என்பதை காட்டும் அம்சம் தான் கிரெடிட் ஸ்கோர். எனவே உங்கள்து கிரெடிட் ஸ்கோர் அளவு குறைவாக இருந்தால், நீங்கள் வாங்கிய கடனை முறையாக திருப்பி செலுத்தாத நபர் என் வங்கிகள் நினைத்துக்கொள்ளும். இதன் காரணமாக தான் கிரெடிட் ஸ்கோர் குறைவாக உள்ள நபர்களுக்கு கடன் வழங்க வங்கிகள் முன்வராது. இந்த சிக்கலை தவிர்க்க வங்கி கடன், கிரெடிட் கார்டு கடன் ஆகியவற்றை முறையாக திருப்பி செலுத்த வேண்டியது கட்டாயமாக உள்ளது.

இதையும் படிங்க : ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வரும் 8வது ஊதியக்குழு.. முக்கிய அம்சங்கள் என்ன என்ன?

அதாவது மாத தவணை முறையில் கடன் வாங்கியுள்ள நபர்கள் ஒவ்வொரு மாதமும் கடனை திருப்பி செலுத்தும் காலக்கெடுவுக்கு முன்னதாகவோ அல்லது உரிய நேரத்திலோ திருப்பி செலுத்த வேண்டும். ஒருவேளை உரிய நேரத்திற்குள் நீங்கள் மாத தவணை தொகையை திருப்பி செலுத்தவில்லை என்றால் அது உங்கள் கிரெடிட் ஸ்கோரை குறைக்கும் மிக முக்கிய கார்ணியாக மாறிவிடும்.

கடனை உரிய முறையில் பயன்படுத்துவது

நீங்கள் கடன் தொகையை திருப்பி செலுத்துவது மட்டுமன்றி, அந்த கடன் தொகையை நீங்கள் எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்பதும் மிக முக்கியமானதாக உள்ளது. அதாவது நீங்கள் என்ன என்ன தேவைகளுக்காக கடன் வாங்கிய பணத்தை செலவு செய்கிறீர்கள் என்பது இங்கு முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே மொத்த பணத்தையும் ஒரே தேவைக்காக பயன்படுத்தாமல், பிரித்து பிரித்து பயன்படுத்துவது கிரெடிட் ஸ்கோர் குறையாமல் பாதுகாக்க உதவும்.

இதையும் படிங்க : Gold Price : ஒரே நாளில் சரசரவென சரிந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை.. ரூ.3,360 குறைந்த தங்கம்!

கடன் அறிக்கையை சரிபார்த்தல்

உங்கள் கடன் அறிக்கைகளை ஆண்டுக்கு ஒருமுறையாவது சரிப்பார்க்க வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது. அவ்வாறு நீங்கள் கடன் அறிக்கையை சரிப்பார்க்கும்போது தவறான நிலுவைகள் அல்லது மூடப்பட்ட கணக்குகள் செயலியில் இருப்பது போன்ற பிழைகள் அல்லது முரண்பாடுகள் ஏதேனும் இருந்தால் சம்மந்தப்பட்ட நிறுவனத்தை தொடர்ப்புக்கொண்டு அது குறித்து புகார் அளித்து விளக்கம் பெற வேண்டும். ஒருவேளை நிறுவனம் தவறான கணக்கீட்டை மதிப்பிட்டு இருந்தால் அதனை திருத்தம் செய்ய வேண்டும்.

பான் எண்ணுடன் ஆதார் இணைப்பதற்கான கடைசி நாள்.. யாருக்கு இது கட்டாயமில்லை?
துரந்தர் 2 இன்னும் பயங்கரமாக இருக்கும்.... - ராம் கோபால் வர்மா சர்ப்ரைஸ் தகவல்
விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் ஓய்வு அறிவிப்பில் சந்தேகம் - உத்தப்பாவின் பேச்சால் சர்ச்சை
தோனியின் காரில் இருந்த சிகரெட் பாக்ஸ் - வெளியான வீடியோவால் ரசிகர்கள் அதிர்ச்சி