2026-2027 நிதியாண்டுக்கும் 8.25% வட்டி தானா?.. இபிஎஃப்ஓ குறித்து வெளியான முக்கிய தகவல்!
EPFO Likely To Keep PF Interest Rate As 8.25% | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் வட்டி விகிதத்தை 8.25 சதவீதமாகவே கடைபிடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக வட்டி விகிதம் உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்ட நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது.

மாதிரி புகைப்படம்
ஊழியர் வருங்கால வைப்பு நிதிக்கான (EPFO – Employee Provident Fund Organization) வட்டி விகிதத்தை மத்திய அரசு உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகி வந்த நிலையில், தற்போதுள்ள வட்டி முறையே பின்பற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இதுவரை வழங்கப்பட்டு வந்த 8.25 சதவீதம் வட்டியே 2026-ம் 2027 ஆம் நிதியாண்டுக்கும் கடைபிடிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மார்ச் 02, 2026 அன்று நடைபெற உள்ள ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தின் கூட்டத்தில் இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
ஊழியர்களுக்கு சிறப்பு பலன்களை வழங்கும் இபிஎஃப்ஓ
இந்தியாவில் பணியாற்றும் அரசு மற்றும் அங்கீகாரம் பெற்ற தனியார் துறை ஊழியர்களின் பெயரில் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் கணக்கு தொடங்கப்படும். இந்த கணக்கில் ஊழியர்களின் மாத ஊதியத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு ஊழியர்களின் பிஎஃப் (PF – Provident Fund) வரவு வைக்கப்படும்.
இதையும் படிங்க : தங்க ஈடிஎஃப்களில் முதலீடு செய்ய போறீங்களா?.. முதல்ல இந்த விஷயங்களை கவனியுங்கள்!
அவ்வாறு வரவு வைக்கப்படும் பணத்தை ஊழியர்கள் எப்போது வேண்டுமானாலும் சில காரணங்களுக்காக எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. ஒருவேளை ஊழியர்கள் தங்களது பணத்தை எடுக்கவில்லை என்றால் அவர்களது கணக்கில் இருக்கும் பணத்திற்கு இபிஎஃப்ஓ வட்டியும் வழங்கி வருகிறது.
வட்டி விகிதம் 8.25 சதவீதமாகவே இருக்கும்
முன்னதாக ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் தனது வட்டி விகிதத்தை 8.25 சதவீதத்தில் இருந்து 8.35 சதவீதமாக உயர்த்த உள்ளதாக தகவல் வெளியானது. அவ்வாறு வட்டி விகிதம் உயர்த்தப்படும் பட்சத்தில் ஊழியர்களின் பிஎஃப் கணக்கில் 2026, மார்ச் மாதத்தில் வட்டி தொகை வரவு வைக்கப்படும் என கூறப்பட்டது.
இதையும் படிங்க : இந்தியாவில் தங்கம் ரூ.1 லட்சத்திற்கு கீழ் வரும்.. ரஷ்யாவின் முடிவு எதிரொலிக்கும்.. வல்லுநர்கள் கூறுவது என்ன?
அதாவது, ஊழியர்களின் பிஎஃப் கணக்கில் ரூ.4 லட்சம் இருப்பு இருந்தால் ரூ.35,000 பணமும், இதுவே ரூ.5 லட்சம் இருப்பு இருந்தால் ரூ.45,000 பணமும் வரவு வைக்கப்பட உள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில், 2026 – 2027 ஆம் நிதியாண்டுக்கு ஆதே வட்டி விகிதம் கடைபிடிக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், இறுதி அறிவிப்பு எப்போது வெளியாகும் என ஊழியர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.