PF : ஸ்மார்ட்போன் மூலம் பிஎஃப் பணத்தை சுலபமா எடுக்கலாம்.. எப்படி தெரியுமா?
Easy EPF Withdrawal With Smartphone | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்திள் ஊழியர்களின் பெயர்களில் உள்ள பிஎஃப் கணக்கில் இருந்து ஸ்மார்ட்போன் மூலமே பணத்தை மிக எளிதாக கிளைம் செய்ய முடியும். அது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
இந்தியாவில் அரசு மற்றும் அங்கீகாரம் பெற்ற தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களில் பெயர்களில் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் (EPFO – Employee Provident Fund Organization) கணக்கு தொடங்கப்பட்டு அதில் அவர்களது மாத ஊதியத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு வரவு வைக்கப்படும். இந்த பணத்தை ஊழியர்கள் எப்போது வேண்டுமானாலும் தங்களது தேவைகளுக்காக எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. இந்த நிலையில், பிஎஃப் (PF – Provident Fund) கணக்கில் இருந்து பணத்தை எடுப்பதை மிகவும் கடினமான விஷயமாக பலரும் கருதுகின்றனர். இந்த நிலையில், ஸ்மார்ட்போன் மூலம் சுலபமாக பிஎஃப் பணத்தை எடுப்பது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.
ஸ்மார்ட்போன் மூலம் பிஎஃப் பணத்தை எடுப்பது எப்படி?
- அதற்கு முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தின் இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
- அதில் உங்களுடைய யுஏஎன் (UAN – Universal Account Number) எண் மற்றும் அதற்கான பாஸ்வேர்டை பதிவிட வேண்டும்.
- லாக் செய்து உங்கள் கணக்கிற்குள் நுழைந்த பிறகு அங்கு கொடுக்கப்பட்டு இருக்கும் ஆன்லைன் சர்வீஸ் (Online Service) என்ற பிரிவின் கீழ் உள்ள கிளைம் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
- பிறகு தோன்றும் உங்களது ஆதார் (Aadhaar) மற்றும் வங்கி கணக்கு (Bank Account) விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
- பிறகு அதில் கொடுக்கப்பட்டு இருக்கும் படிவத்தை பூர்த்தி செய்து, எதற்காக பணத்தை எடுக்கிறீர்கள் என்பது குறித்தும் பதிவிட வேண்டும்.
- நீங்கள் உங்கள் படிவத்தை சமர்ப்பிக்கும்போது உங்கள் மொபைல் எண்ணிற்கு ஓடிபி வரும்.
- அந்த ஓடிபியை உள்ளிட்டு உறுதி செய்ய வேண்டும்.
மேற்குறிப்பிட்ட இந்த நடைமுறைகளை பின்பற்றி விண்ணப்பிக்கும் நிலையில், ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் மூன்று நாட்களுக்குள் உங்கள் வங்கி கணக்கில் பணம் வந்து சேர்ந்துவிடும்.
இதையும் படிங்க : 10 மாதங்களில் 50 சதவீதம் உயர்வை சந்தித்த தங்கம்.. வருங்கால நிலவரம் என்னவாக இருக்கும்?
உமாங் செயலி மூலம் பிஎஃப் பணம் எடுப்பது எப்படி?
- முதலில் உமாங் (UMANG) செயலிக்கு செல்ல வேண்டும்.
- அதில் முகப்பு பக்கத்தை கிளிக் செய்து இபிஎஃப்ஓ அம்சத்தை தேர்வு செய்ய வேண்டும்.
- அதில் Employee Centric Services என்பதை கிளிக் செய்து Raise Claims என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- பிறகு எவ்வளவு பணத்தை எடுக்க வேண்டும், அதற்கான காரணம் என்ன என்பது குறித்து குறிப்பிட வேண்டும்.
- பிறகு உரிய சான்றிதழ்களை சம்ர்ப்பிக்க வேண்டும்.
இந்த நடைமுறையை பின்பற்றி விண்ணப்பிக்கும் பட்சத்தில் மூன்று நாட்களுக்குள் பணம் கணக்கில் வந்து சேர்ந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.