போன் மூலம் நடக்கும் கிரெடிட் கார்டு மோசடிகள் – பாதுகாப்பாக இருப்பது எப்படி?

Credit Card Scam Alert: கிரெடிட் கார்டு மோசடிகள் கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்திருக்கிறது. கடந்த 2024 ஆம் ஆண்டு மட்டும் 36 லட்சம் அளவுக்கு கிரெடிட் கார்டு மோசடிகள் நடைபெற்றிருக்கின்றன. கிரெடிட் கார்டு மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி என பார்க்கலாம்.

போன் மூலம் நடக்கும் கிரெடிட் கார்டு மோசடிகள் - பாதுகாப்பாக இருப்பது எப்படி?

மாதிரி புகைப்படம்

Published: 

10 Sep 2025 15:05 PM

 IST

கடந்த சில ஆண்டுகளாக டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ள நிலையில், கிரெடிட் கார்டு (Credti Card) மோசடிகள் அதிகரித்திருக்கின்றன. குறிப்பாக ஓடிபி, சிசிவி எண்கள் அல்லது கிரெடிட் கார்டின் போட்டோவை நம் ஸ்மார்ட்போனில் பகிர்வது மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என நிபணர்கள் எச்சரிக்கின்றனர். கிரெடிட் கார்டுகளை மற்றவர்களுக்கு போன் மூலம் பகிர்வதால், ஹேக்கர்கள் கைக்கு அவை சென்றுவிட வாய்ப்பு இருக்கிறது. அதனை பயன்படுத்தி அவர்கள் கணக்கை தவறாக பயன்படுத்தும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் கிரெடிட் கார்டு மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி என  இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

மோசடிகளால் அதிகரிக்கும் இழப்புகள்

உள்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும் ரூ.22,845 கோடி பணத்தை சைபர் குற்றவாளிகளால் மக்கள் இழந்துள்ளனர். கடந்த 2023 ஆம் ஆண்டில் பதிவான ரூ.7,465 கோடியை விட 20 சதவிகிதம் அதிகம். கடந்த 2024 ஆண்டில் மட்டும் 36 லட்சம் நிதி மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.  இந்த வழக்குகள் பெரும்பாலும் தொலைபேசி மூலம் நடந்தவை. மோசடிகள் பெரும்பாலும் கிரெடிட் கார்டு விவரங்களை கேட்டு பயனர்களின் அடையாளங்களை திருடி நிதி இழப்புகளை ஏற்படுத்தியுள்ளனர்.

இதையும் படிக்க :  கிரெடிட் கார்டு பயன்படுத்துகிறீர்களா?.. இந்த தவறை செய்யாதீர்கள்.. வருமான வரித்துறை உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பலாம்!

தொலைபேசி பரிவர்த்தனைகளின் பொதுவான அபாயங்கள்

மோசடியில் ஈடுபடுபவர்கள் ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா, SEBI போன்ற அதிகாரப்பூர்வ நிறுவனங்களின் பெயரில் போன் செய்து பயனர்களை நம்ப வைக்கிறார்கள். அவர்கள் ஓடிபி, CVV, கார்டின் முன்புற படம், பின் போன்றவற்றை  பயனர்களிடம் கேட்டு அவற்றை பயன்படுத்துகின்றனர். தவறான தகவல் பகிர்வதால் சில நேரங்களில் கார்டு முடக்கப்படும் அபாயமும் ஏற்படும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மன அழுத்தம், நிதி இழப்பு என நீண்ட கால பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள்.

இதையும் படிக்க : வருமான வரி தாக்கல் கடைசி தேதி நீட்டிப்புக்காக காத்திருக்காதீர்கள்.. எச்சரிக்கும் பொருளாதார நிபுணர்கள்.. காரணம் என்ன?

பாதுகாப்பாக இருக்க 5 எளிய வழிகள்

  • ஓடிபி, பின் போன்ற கார்டு விவரங்களை யாரிடமும் போன் மூலம் பகிர வேண்டாம். எந்த வங்கியும் இவற்றை கேட்காது
  • சலுகை, கேஷ்பேக் போன்ற வாக்குறுதிகளால் மோசடிக்காரர்கள் பயனர்களை ஈர்க்க முயற்சிப்பார்கள். அவர்களிடம் இருந்து எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.
  • பேங்க் ஸ்டேட்மென்ட்களை அடிக்கடி சரிபார்க்கவும். பரிவர்த்தனை அலெர்ட் மெசேஜ்களை போனுக்கு வருமாறு செய்யவும்.
  • மோசடிகள் நடந்தால் உடனடியாக புகார் செய்யவும். தேசிய சைபர் கிரைம் புகார் தளமான cybercrime.gov.in மூலம் புகார் அளிக்கலாம்.
  • அதிகாரப்பூர்வ மற்றும் பாதுகாப்பான போர்டல்களில் இருந்து மட்டுமே பரிவர்த்தனைகளை மேற்கொள்ளுங்கள்.