இதுவரை இல்லாத அளவு அதிக அகவிலைப்படி.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. முக்கிய தகவல்!

High Dearness Allowance For Central Government Employees | மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒருமுறை அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும். அந்த வகையில், 2026 ஆம் ஆண்டுக்கான முதல் அகவிலைப்படி உயர்வு குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை இல்லாத அளவு அதிக அகவிலைப்படி.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. முக்கிய தகவல்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

15 Feb 2026 12:03 PM

 IST

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA – Dearness Allowance) உயர்வு தொடர்பான தகவல் வெளியாக உள்ள நிலையில், கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்த முறை அதிக அளவு அகவிலைப்படி பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான முதல் அகவிலைப்படி உயர்வை எதிர்பார்த்து அரசு ஊழியர்கள் காத்திருக்கும் நிலையில், இந்த அறிவிப்பு அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக அமைந்துள்ளது. இந்த நிலையில், அகவிலைப்படி உயர்வு குறித்து வெளியாகியுள்ள முக்கிய தகவல் குறித்து விரிவாக பார்க்கலாம்.

7 ஆண்டுகளில் இல்லாத அளவு அகவிலைப்படி உயர்வு

2026 ஆம் ஆண்டுக்கான முதல் அகவிலைப்படி உயர்வை எதிர்பார்த்து அரசு ஊழியர்கள் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் தான் 7 ஆண்டுகளில் இல்லாத அளவு மத்திய ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது ஏழாவது சம்பள கமிஷன் முடிவுற்று, 8வது சம்பள கமிஷன் அமலுக்கு வந்திருக்க வேண்டும். ஆனால், இதுவரை 8வது சம்பள கமிஷன் அமலுக்கு வராமல் உள்ளது. இதன் காரணமாக மத்திய அரசு ஊழியர்கள் அதிருப்தியில் உள்ள நிலையில், அவர்களுக்கு மிகச் சிறந்த அகவிலைப்படி உயர்வை அரசு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : பழைய தங்கத்தை மாற்றி புதிய தங்கம் வாங்க போறீங்களா.. இதையெல்லாம் கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!

ஆண்டுக்கு இரண்டு முறை உயர்த்தப்படும் அகவிலைப்படி உயர்வு

மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. அதாவது ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் ஒருமுறையும், ஜூலை முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் இரண்டாவது முறையும் அகவிலைப்படி உயர்த்தி அறிவிக்கப்படும். தற்போது 2026 ஆம் ஆண்டு தொடங்கியுள்ள நிலையில், முதல் அகவிலைப்படி உயர்வு குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : வட்டி மட்டுமே ரூ.11 லட்சம்.. இந்த திட்டத்தில் இப்படி முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம்!

ஏற்கனவே மத்திய அரசு ஊழியர்கள் 58 சதவீதம் அகவிலைப்படி தொகையை பெற்று வரும் நிலையில், இந்த முறை அவர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்கள் இந்த முறை 60 சதவீதம் அகவிலைப்படி தொகையை பெறுவார்கள் என கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியாவில் பாகிஸ்தான் ஹாக்கி அணிக்கு நேர்ந்த அவமானம்
திருமணத்துக்கு பிறகு சகோதரியின் காருக்கு பின்னால் 70 கி.மீ சைக்கிளில் சென்ற சகோதரன் - வைரலாகும் வீடியோ
பீகாரில் ரோஸ் டே கொண்டாடிய பெண்ணுக்கு எதிராக வழக்கு
ராம் சரணின் இரட்டை குழந்தைகளின் பெயர் என்ன தெரியுமா?