இந்த ஆப் மூலம் சில நிமிடங்களில் இடம் வாங்கலாம் – எப்படி தெரியுமா?
Buy Plots in Minutes : இந்தியாவில் வீடு மற்றும் நிலம் வாங்குவது பலரின் கனவு. அதன் மதிப்பு நாளுக்கு நாள் உயரும் என்பதால் நிலத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது ஜெப்டோ செயலியில் சில விநாடிகளில் இடம் வாங்க முடியும்.

மாதிரி புகைப்படம்
நடுத்தர வர்க்கத்தினர் அதிகம் நிறைந்த இந்தியாவில் பலரது கனவு வீடு கட்ட வேண்டும் என்பதாகத் தான் இருக்கும். குறிப்பாக பலரும் ஆண்டுக்கணக்காக சேமித்த பணத்தில் தங்கம் (Gold), நிலம், வீடு போன்றவற்றில் தான் முதலீடு செய்கின்றனர். காரணம் இவை தான் காலப்போக்கில் அதன் மதிப்பு வளரும் என அவர்கள் நினைக்கின்றனர். ஆனால் நிலம் வாங்குவது எளிதானது அல்ல. ஒரு இடம் எங்கே இருக்கிறது, அதன் விலை என்ன? எதிர்காலத்தில் அதன் மதிப்பு என்னவாக இருக்கும், அதில் வில்லங்கம் இருக்கிறதா என அனைத்தையும் ஆய்வு செய்த பிறகே நிலத்தை வாங்க முடியும். ஆனால் இதற்கே சில மாதங்கள் முதல் ஆண்டுகளாகும். ஆனால் இந்தியாவில் ஒரு செயலியில் சில விநாடிகளில் வீடு வாங்க முடியும். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவில் நிலம் வாங்கும் செயல்முறையை எளிதாக மாற்றவும், வேகமாகவும், வெளிப்படையாகவும் மாற்றும் நோக்கில், ரியல் எஸ்டேட் நிறுவனமான ஹவுஸ் ஆஃப் அபிநந்தன் லோதா மற்றும் கிவிக் காமர்ஸ் நிறுவனங்கள் இணைந்து ஜெப்டோ செயலியுடன் இணைந்து புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் இனி வாடிக்கையாளர்கள் மளிகைப் பொருட்கள் வாங்குவது போல சில விநாடிகளில் இடம் வாங்க முடியும். அதாவது வாடிக்கையாளர்கள் தாங்கள் இடம் வாங்க வேண்டிய லொகேஷனை தேர்ந்தெடுத்துபதிவு செய்து முன்பணம் செலுத்தி இடம் வாங்கலாம்.
இதையும் படிக்க : தனிநபர் கடன் Vs தங்க நகை கடன்?.. இந்தியாவில் நிதி தேவைக்கு எது சிறந்தது?
எப்படி வேலை செய்யும்?
இதற்காக ப்ளே ஸ்டோரில் ஜெப்டோ ஆப் டவுன்லோடு செய்து வழக்கமான லாகின் செயல்முறைகளை முடித்த பின்னர், உள்ளே சென்று சர்ச் பாக்ஸில் Land என டைப் செய்ய வேண்டும். இதனையடுத்து ஆப்பில் இருந்து ஹவுஸ் ஆஃப் அபிநந்தன் லோதாவின் தனிப்பட்ட பக்கத்திற்கு செல்லும். அங்கு நிலங்கள் அடங்கிய விவரங்கள் இருக்கும். உங்களுக்கு விருப்பமான நிலத்திற்கு பணம் செலுத்தித முன்பதிவு செய்து கொள்ளலாம். ஒருவேளை அந்த இடத்தை வாங்கும் முடிவை நாம் கைவிட்டால், நாம் செலுத்திய பணம் நமக்கு திருப்பி அளிக்கப்படும். இப்படி நாம் முன்பதிவு செய்யும் நிலத்துக்கு மீதி தொகையை மாத தவணைகளாக செலுத்தலாம்.
இந்த வசதிகள் தற்போது உத்தரப்பிரதேசத்தின் விரிந்தாவன் மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நேரல் பகுதிகிளில் உள்ள நிலங்கள் இந்த முறையில் விற்பனை செய்யப்படுகின்றன. இதன் பிறகு நாடு முழுவதும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க : பெற்றோருக்கு வீட்டு வாடகை செலுத்தினால் HRA க்ளெய்ம் செய்யலாமா?.. விதிகள் கூறுவது என்ன?
நிறுவனத்தின் பின்னணி
கடந்த 2020 ஆம் ஆண்டு மும்பையை தலைமையிடமாக கொண்டு துவங்கப்பட்ட ஹவுஸ் ஆஃப் அபிநந்தன் லோதா. இதுவரை 1.1 கோடி சதுர அடி நிலங்களை விற்பனை செய்துள்ளது. தற்போது 3 கோடி சதுர அடியிலான நிலங்களை விற்கும் திட்டங்கள் நடைமுறையில் இருக்கின்றன. தற்போது கோவா, அலிபாக், அயோத்தி போன்ற பிரபலமான இடங்களில் திட்டங்களை முன்னெடுத்துள்ளது.