இனி மோசடி, ஸ்பேம் கால்கள் குறித்து கவலை இல்லை.. ஆதாரை மையப்படுத்தி அசத்தல் அம்சத்தை சோதனை செய்யும் அரசு!
Aadhaar-Linked Caller ID | இந்தியாவில் ஸ்பேம் மற்றும் மோசடி போன் கால்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவற்றை கட்டுப்படுத்தும் விதமாகவும், அதனால் ஏற்படும் மோசடிகளை தடுக்கவும் அரசு ஒரு அற்புதமான முயற்சியை கையில் எடுத்துள்ளது. அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
இந்தியாவில் நாளுக்கு நாள் மோசடி சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவ்வாறு மோசடிகளுக்கு ஆளாகும் பொதுமக்கள் கோடிக்கணக்கான பணத்தை இழந்து வருகின்றனர். அதனை தடுக்கும் வகையில் அரசு பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஆதாருடன் இணைக்கப்பட்ட காலர் ஐடி சிஸ்டத்தை (Aadhaar Linked Caller ID System) இந்திய அரசு (Indian Government) சோதனை செய்து வருகிறது. பொதுமக்களுக்கு வரும் ஸ்பேம் மற்றும் மோசடி கால்களை கட்டுப்படுத்துவதை நோக்கமாக கொண்டு இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது. இந்த அம்சம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஆதாருடன் இணைக்கப்பட்ட காலர் ஐடி சிஸ்டம் – எப்படி செயல்படும்?
உங்களுக்கு ஏதேனும் அழைப்பு வந்தால் உங்களது ஸ்மார்ட்போனில் தொடர்ப்புக்கொள்ளும் நபரின் பெயர் அவர் சிம் கார்டு வாங்கும்போது ஆதாரமாக கொடுத்த ஆதார் கார்டில் எப்படி உள்ளதோ அதேபோல உங்களுக்கு தோன்றும். நீங்கள் ஏற்கனவே அந்த நபரின் பெயரை பதிவு செய்து வைத்திருந்தாலும், ஆதாரில் உள்ள பெயர் தொன்றும். உதாரணமாக நீங்கள் அப்பா, அம்மா, அண்ணா என உங்களது குடும்ப உறுப்பினர்களின் பெயரை பதிவு செய்து வைத்திருந்தாலும் கூட உங்கள் ஸ்மார்ட்போனில் அவர்களது ஆதார் கார்டு பெயர் தான் தோன்றும்.
இதையும் படிங்க : ரூ. 5,000-ல் SIP தொடங்கினால் எத்தனை ஆண்டுகளில் ரூ.1 கோடி பெறலாம்.. சிம்பிள் ஃபார்முலா!
பெரும்பாலான நபர்கள் தங்களது மொபைல் எண்ணுக்கு வரும் தெரியாத எண்களை கண்டுபிடிக்க மூன்றாம் தரப்பு செயலிகளை பயன்படுத்துவர். இவற்றின் மூலம் தகவல் திருட்டு உள்ளிட்ட அபாயங்கள் உள்ளன. இந்த நிலையில் தான் தரவுகளை பாதுகாக்கவும், அதே சமயம் பொதுமக்களை மோசடிகளில் இருந்து பாதுகாக்கவும் அரசு இந்த முயற்சியை கையில் எடுத்துள்ளது.
அரசு இந்த முயற்சியை கையில் எடுக்க என்ன காரணம்?
Modi govt is now testing CNAP – a new caller ID system that shows the Aadhaar-linked name of the caller first, even before the name saved in your phone.
This could be a game-changer for stopping fraud pic.twitter.com/yaNaJv0g0g
— Sunny Raj (@SunnyRajBJP) November 22, 2025
கால் செய்யும் நபரின் விவரம் துல்லியமானதாகவும், உண்மையானதாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக அரசு இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளது. ஸ்பேம் மற்றும் மோசடி கால்கள் தொடர்பான சிக்கல்களை பொதுமக்கள் தங்களது அன்றாட வாழ்வில் அதிகம் சந்தித்து வரும் நிலையில், அவற்றை கட்டுப்படுத்தி பொதுமக்களை பாதுகாக்கும் விதமாக இந்த அம்சம் அமலுக்கு வர உள்ளது.
இதையும் படிங்க : சுற்றுலா செல்ல லோன் வாங்க போறீங்களா?.. இந்த விஷயங்கள் குறித்து கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
தற்போதுள்ள மூன்றாம் தரப்பு செயலிகளில் செல்லப்பெயர்கள், எழுத்து பிழை கொண்ட பெயர்கள் தான் தோன்றுகிறது. எனவே இந்த சிக்கல்களை தீர்க்கும் விதமாக அரசு இந்த நடவடிக்கையை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது உங்களது மொபைல் எண்ணுக்கு உங்களுக்கே தெரியாத அல்லது நீங்கள் பதிவு செய்யாத பெயரில் இருந்து உங்களுக்கு அழைப்பு வந்தால் அது அரசின் இந்த சோதனை தான் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.