ஜெட் வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. ஒரு கிராம் இவ்வளவா? நகை பிரியர்கள் அதிர்ச்சி!

Chennai Gold Price on May 21st : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்து ரூ.71,440க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராமுக்கு ரூ.220 உயர்ந்து ரூ.8,930க்கு விற்பனையாகிறது. கடந்த சில தினங்களாக தங்கம் விலை ரூ.69,000 ஆக இருந்த நிலையில், 2025 மே 21ஆம் தேதியான இன்று ரூ.71 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

ஜெட் வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. ஒரு கிராம் இவ்வளவா? நகை பிரியர்கள் அதிர்ச்சி!

சென்னை தங்கம் விலை

Updated On: 

21 May 2025 10:38 AM

சென்னை, மே 21 : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்து ரூ.71,440க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராமுக்கு ரூ.220 உயர்ந்து ரூ.8,930க்கு விற்பனையாகிறது. கடந்த  சில நாட்களாக தங்கம் விலை சரிந்து வந்த நிலையில்,  2025 மே 21ஆம் தேதியான  இன்று அதிரடியாக உயர்ந்தது நகை பிரியங்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதே நேரத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 காசுகள் உயர்ந்து 111 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பார் வெள்ளி ரூ.1,11,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே ஏற்ற இறக்கத்தில் இருந்து வருகிறது. ஏற்ற இறக்கத்தில் இருந்தாலும், தங்கம் விலை ரூ.70 ஆயிரத்தை கடந்து சென்றது.

ஜெட் வேகத்தில் ஏறிய தங்கம் விலை

இதனால், நடுத்தர வர்கத்திற்கு தங்கம் வாங்குவது பெரும் சவாலாகவே உள்ளது. அதே நேரத்தில், தங்கத்தில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 2024ஆம் ஆண்டில் தங்கம் விலை ரூ.42,000 இருந்த நிலையில், தற்போது ரூ.71,000 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த ஒரு வருடத்தில் மட்டும் ரூ.30,000 வரை உயர்ந்தது நகை பிரியர்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 2025 ஏப்ரல் மாதம் பல்வேறு காரணங்களால் தங்கம் விலை உயர்ந்த நிலையில், அதன்பிறகு தங்கம் விலை சற்றை குறைந்தது. அதாவது, மே இரண்டாம் வாரத்தில் தங்கம் விலை ரூ.68,500 ஆக இருந்தது.

அதன்பிறகு சற்று ஏறி, இறங்கி மட்டுமே வந்தது. 2025 மே 20ஆம் தேதியான நேற்று கூட தங்கம் விலை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.8,710, ஒரு சவரன் ரூ.69,680-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், 2025 மே 21ஆம் தேதியான இன்று தங்கம் விலை  அதிரடியாக உயர்ந்தது. இதன் மூலம் கிராமுக்கு ரூ.8,930க்கும், சவரனுக்கு ரூ.71,440க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்

  • மே 12, 2025 – 22 கேரட் ஒரு கிராம் தங்கம் ரூ. 8,750க்கும், ஒரு சவரன் ரூ.70,000க்கும் விற்பனை செய்யப்பட்டது.
  • 2025, மே 13 – 22 கேரட் ஒரு கிராம் தங்கம் ரூ. 8,855க்கும், ஒரு சவரன் ரூ.70,840க்கும் விற்பனை செய்யப்பட்டது.
  • 2025, மே 14- 22 கேரட் ஒரு கிராம் தங்கம் ரூ. 8,805க்கும், ஒரு சவரன் ரூ.70,440க்கும் விற்பனை செய்யப்பட்டது.
  • 2025, மே 15- 22 கேரட் ஒரு கிராம் தங்கம் ரூ. 8,610க்கும், ஒரு சவரன் ரூ68,880க்கும் விற்பனை செய்யப்பட்டது.
  • 2025, மே 16- 22 கேரட் ஒரு கிராம் தங்கம் ரூ. 8,720க்கும், ஒரு சவரன் ரூ69,760க்கும் விற்பனை செய்யப்பட்டது.
  • 2025, மே 17- 22 கேரட் ஒரு கிராம் தங்கம் ரூ. 8,720க்கும், ஒரு சவரன் ரூ69,760க்கும் விற்பனை செய்யப்பட்டது.
  • 2025, மே 18- 22 கேரட் ஒரு கிராம் தங்கம் ரூ. 8,720க்கும், ஒரு சவரன் ரூ69,760க்கும் விற்பனை செய்யப்பட்டது.
  • 2025, மே 19- 22 கேரட் ஒரு கிராம் தங்கம் ரூ. 8,755க்கும், ஒரு சவரன் ரூ.70,040க்கும் விற்பனை செய்யப்பட்டது.
  • 2025, மே 20- 22 கேரட் ஒரு கிராம் தங்கம் ரூ. 8,710க்கும், ஒரு சவரன் ரூ.69,680க்கும் விற்பனை செய்யப்பட்டது.