18 வயதில் CEO ஆன மாணவர்… மாதம் ரூ.12 கோடி லாபம் ஈட்டும் நிறுவனம் – சாதித்து எப்படி?
Success Story : அமெரிக்காவில் 18 வயது மாணவர் தான் உருவாக்கிய கால் ஏஐ நிறுவனத்தின் மூலம் மாதம் ரூ.12 கோடி வரை சம்பாதிக்கிறார். அவரது வெற்றிக்கு ஆர்வமும் கடின உழைப்புமே காரணம். அவரது வெற்றிக்கதை குறித்து இந்தக் கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
அமெரிக்காவின் (America) மியாமி பல்கலைக்கழகத்தில் படிக்கும் 18 வயது மாணவர் சச் யாதேகரி (Zach Yadegari) இன்று ஒரு மிகப்பெரிய தொழில்முனைவோராக செயல்பட்டு வருகிறார். அவர் உருவாக்கிய கால் ஏஐ (Cal AI) என்ற செயலி மாதம் சுமார் 1.4 மில்லியன் அமெரிக்க டாலர், இந்திய மதிப்பில் ரூ.15 கோடி வருமானம் ஈட்டு வருகிறது. இதற்கு அவரது ஆர்வமும், கடின உழைப்புமே காரணம். நம் நன்றாக இருக்க வேண்டுமா? இல்லையா என்பதை சந்தையே தீர்மானிக்கும் என்கிறார் அவர். இந்த இளைஞரின் வெற்றி கதை குறித்து விரிவாக இந்த கட்டுரை மூலமாக பார்க்கலாம்.
சச் சிறுவயதில் ஆன்லைன் விளையாட்டுகள் மீது ஈர்க்கப்பட்டார். அது தான் அவரை கோடிங் நோக்கி செல்லத் தூண்டியது. தனது 7 வயதில் கோடிங் கற்றுக்கொண்டார். அவரது அம்மா சச்சிற்கு கோடிங் மீது உள்ள ஆர்வத்தை பார்த்து சம்மர் கோடிங் கேம்பிற்கு அனுப்பினார். பின்னர் தன் ஆர்வத்தை முதலீடாக்கிய சச் யூடியூப் வீடியோக்கள் மற்றும் டெவலபர்களிடம் தொடர்பு கொண்டு தானாகவே கற்றுக்கொண்டார்.
இதையும் படிக்க : மகனுக்காக உருவாக்கிய கெமிக்கல் இல்லா நீச்சல் குளம் – ரூ.3 கோடி ஆண்டு வருமானம் ஈட்டும் நபர் – எப்படி நடந்தது இந்த மேஜிக்
சச் உருவாக்கிய செயலி
அதிக உடல் எடையால் அவதிப்பட்டு வந்த சச், தன் எடையைக் குறைக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. ஆனால் தினசரி சாப்பாட்டை கையாள்வது அவருக்கு சிரமமாக இருந்தது. இதனையடுத்து தனது நண்பர்கள் ஹென்றி லாங்மேக் மற்றும் பிளேக் ஆண்டர்சன் ஆகியோருடன் சேர்ந்து ஏஐ மூலம் உணவின் புகைப்படத்தில் இருந்து கலோரிகளை கணக்கிடும் செயலியை உருவாக்கினார். ஏஐ மூலம் இந்த செயலி உருவாக்கப்பட்டது. கால் ஏஐ என்ற இந்த செயலி கடந்த 2024 ஆம் ஆண்டு மே மாதத்தில் அறிமுகமானது. இந்த செயலியின் மூலம், நாம் சாப்பிடவிருக்கும் செயலியை போட்டோ எடுத்து அனுப்பினால் அதில் உள்ள கலோரிகளை துல்லியமாக சொல்லும்.
இந்த செயலியை நாம் இலவசமாக டவுன்லோடு செய்துகொள்ளலாம். ஆனால் பயன்படுத்துவதற்கு நாம் சந்தா செலுத்த வேண்டும். இதனை பயன்படுத்த மாதம் இந்திய மதிப்பில் ரூ.220ம், வருடத்திற்கு நீங்கள் ரூ.2,650ம் செலுத்த வேண்டும்.
இதையும் படிக்க : 1 ரூபாய் ஷாம்பூ பாக்கெட்… இந்தியாவில் தொழில் புரட்சிக்கு காரணமான தமிழர் – கவின்கேர் நிறுவனத்தின் வெற்றிக் கதை
நிறுவனத்தின் வளர்ச்சி
சச் தனது செயலியை அறிமுகபடுத்திய போது அவருக்கு இந்திய மதிப்பில் மாதம் ரூ.25 லட்சம் வருமானம் கிடைத்திருக்கிறது. இரண்டாவது மாதம் அப்படியே 4 மடங்காக உயர்ந்து ரூ.1 கோடியாக மாறியிருக்கிறது. இன்று அவரது செயலியை 80 லட்சத்துக்கும் அதிகமானோர் டவுன்லோடு செய்துள்ளனர். அவரது நிறுவனத்தில் 30 பேர் வேலை செய்கிறார்கள். அவரது நிறுவனம் ரூ. 12 கோடி வருவாய் ஈட்டி வருகிறது.
செயலியின் வெற்றிக்கு பிறகு சச் வீட்டில் ஜாலியாக அமர்ந்திருக்கவில்லை. அவர் கல்லூரியில் படித்து வருகிறார். வாரத்திற்கு 40 மணி நேரம் வேலை செய்கிறார். பெரிய வீடு ஒன்றை கட்டியுள்ள அவர், தனது கனவு காரான லம்போகினி காரை வாங்கியுள்ளார். இந்த வளர்ச்சிக்கு காரணம் அவரது ஆர்வமும் கடின உழைப்பும் தான்.