எதிரி நாட்டு கப்பல்களுக்கு அனுமதி இல்லை.. திட்டவட்டமாக கூறும் ஈரான்!

Iran On Strait of Hormuz Permission | ஹோர்முஸ் நீரிணையை ஈரான் தனது கட்டுப்பாட்டுக்களுள் வைத்துள்ளதால் சில நாடுகளின் கப்பல்களுக்கு அந்த வழியாக செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக உலக அளவில் மிக கடுமையான கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

எதிரி நாட்டு கப்பல்களுக்கு அனுமதி இல்லை.. திட்டவட்டமாக கூறும் ஈரான்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

15 Mar 2026 23:21 PM

 IST

தெஹ்ரான், மார்ச் 15 : இஸ்ரேல் (Israel), அமெரிக்கா (America) மற்றும் ஈரான் (Iran) இடையே கடுமையான போர் நிலவி வரும் நிலையில், ஹோர்முஸ் நீரிணியை கடக்க எதிரி நாட்டு கப்பல்களுக்கு அனுமதி இல்லை என்றும், நட்பு நாடுகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று ஈரான் தெரிவித்துள்ளது. ஏற்கனவே உலக நாடுகள் கச்சா எண்ணெய் பற்றாக்குறையால் கடும் சிக்கல்களை எதிர்க்கொண்டு வரும் நிலையில், ஹோர்முஸ் நீரிணை குறித்து ஈரான் என்ன கூறியுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

போரால் ஹோர்முஸ் நீரிணையை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஈரான்

இஸ்ரேம் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரான் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் ஈரான் கடும் சேதங்களை கண்டுள்ள நிலையில், பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. அதுமட்டுமன்றி, ஹோர்முஸ் நீரிணையை ஈரான் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. இதனால், உலக அளவில் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவில் எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இதையும் படிங்க : துபாயில் மீண்டும் தாக்குதல்.. புர்ஜ் கலிஃபா அருகே புகை மூட்டம்.. வைரலாகும் வீடியோக்கள்!

ஹோர்முஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் கூறிய முக்கிய தகவல்

இந்த குழப்பத்திற்கு மத்தியில் ஹோர்முஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்கி சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது, ஹோர்முஸ் நீரிணையை நாங்கள் மூடவில்லை. உண்மையில் அந்த நீரிணை திறந்தே இருக்கிறது. இது எங்கள் எதிரிகளுக்கு சொந்தமான கப்பல்களுக்கு மட்டுமே மூடப்பட்டுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அவர்களின் நட்பு நாடுகளுக்கு மட்டுமே இந்த முக்கிய கடல் பாதை மூடப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : அமெரிக்காவின் செயலுக்கு நிச்சயம் பழிவாங்குவோம் – ஈரானின் புதிய உயரிய தலைவர் மொஜ்தபா காமெனி உறுதி

மற்ற நாடுகளின் கப்பல்கள் சுதந்திரமாக கடந்து செல்லலாம். பாதுகாப்பு கவலைகள் காரணமாக பல கப்பல்கள் இந்த பாதையை பயன்படுத்த வேண்டாம் என்று முடிவு செய்து இருக்கிறார்கள். இதற்கு எங்களுக்கும் எந்த வித சம்மந்தமும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

Follow Us
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..