டெலிகிராமை தடைசெய்யும் வியாட்நாம் அரசு – என்ன காரணம் தெரியுமா?
Vietnam Bans Telegram : வியட்நாம் அரசு, டெலிகிராம் செயலியை தடை செய்யத் திட்டமிட்டுள்ளது. இதற்கான முக்கிய காரணமாக, போதைப்பொருள் வர்த்தகம், மோசடி, அரசுக்கு எதிரான கருத்துகள் உள்ளிட்ட சட்டவிரோத உள்ளடக்கங்களை பரப்பும் குழுக்களை தடுக்க செயலி ஒத்துழைக்கவில்லை என்பதே அரசு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது

மாதிரி புகைப்படம்
வியட்நாம் (Vietnam) அரசு தற்போது டெலிகிராம் (Telegram) மெசேஜிங் பயன்பாட்டை தடை செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது. பிரபலமான இந்த மெசேஜிங் செயலி, சட்டவிரோதமான செயல்களுக்கு துணைபுரிவதாகவும், அந்நாட்டு சட்டங்களை பின்பற்றுவதில்லை எனவும் கூறி வியநாட்நாமில் டெலிகிராம் தடை செய்ய முடிவடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக வியட்நாம் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்ததாவது, பல டெலிகிராம் குழுக்கள் நாட்டின் சட்ட ஒழுங்கை பாதிக்கும் வகையில் மோசமான தகவல்களை பரப்புகின்றன என்று கூறியுள்ளது. மேலும் அரசுக்கு எதிரான கருத்துகள், மோசடிகள், போதைப்பொருட்கள் விநியோகம், சட்டவிரோத தரவுகள் பரிமாற்றம் போன்றவை இடம்பெறுகின்றன அந்நாடு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.
மேலும், டெலிகிராம் நிறுவனம், நாட்டின் அந்நாட்டு சட்டங்களை பின்பற்றவில்லை என்றும், தடை செய்யப்பட்ட பதிவுகளை நீக்கவோ அல்லது கண்காணிக்கவோ தங்களுக்கு ஒத்துழைக்கவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், வியட்நாமில் டெலிகிராம் நிறுவனம் இயங்குவதற்கான முறையாக பதிவு செய்யவில்லை என்பதும் வியட்நாம் மேலும் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.
தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்:
இந்த நிலையில், வியட்நாம் அரசு டெலிகிராம் செயலியை தடுக்குமாறு, அந்த நாட்டு இணைய மற்றும் தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. ஆனால் டெலிகிராம் மற்றும் வியட்நாம் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இந்த புகார் குறித்து எதுவும் பதிலளிக்கவில்லை. இந்த நடவடிக்கை, வியட்நாம் அரசின் இணையதளங்களை கட்டுப்படுத்தும் விரிவான முயற்சியின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது. மேலும். ஃபேஸ்புக், யூடியூப் போன்ற உலக அளவில் பிரபலமான சமூக வலைதளங்களுக்கு அந்நாட்டில் அனுமதி வழங்கப்பட்டபோதிலும் அரசு தனக்கு விருப்பமில்லாத கருத்துக்கள் மற்றும் முறையான கடுப்பாடுகள் இன்றி வெளியாகும் கண்டெட்களை கடுமையாக எதிர்த்து வருகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு அந்நாட்டு அரசு வெளியிட்ட புதிய விதிமுறையின் படி, மற்ற நாடுகளை சேர்ந்த சமூக வலைதளங்கள் அதன் யூசர்களின் அடையாளங்களை சரிபார்த்து அவற்றை அரசு கேட்டால் வழங்க வேண்டும் என்ற விதிமுறை விதிக்கப்பட்டிருந்தது.
டெலிகிராமின் எதிர்காலம்?
தற்போதைய நிலைமையில், டெலிகிராம் செயலியின் எதிர்காலம் வியட்நாமில் கேள்விக்குறியாக உள்ளது. அரசின் கடுமையான இணைய கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடரும் என தெரிகிறது. இதன் மூலம், உள்ளூர் சட்டங்களை பின்பற்றாத பன்னாட்டு டிஜிட்டல் தளங்கள் மீது அரசு கடுமையாக செயல்படத் தயாராக இருப்பது தெரிய வருகிறது. மேலும் டெலிகிராமை பயன்படுத்தி பல மோசமான நடவடிக்கைள் நடைபெற்றுவருவதாகவும் அதற்கு அந்நிறுவனம் அனுமதிப்பதாகவும் கடந்த சில ஆண்டுகளாக புகார் தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்தியாவில் அந்த குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது. ஆனால் இந்தியாவில் அது தடை செய்யப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.