நியூயார்க்கின் முதல் முஸ்லிம் மேயரானார் ‘ஸோரான் மம்தானி’!

Zohran Mamdani: தேர்தல் பிரசாரத்தின் போது ஸோரான் மம்தானி வெற்றி பெறக் கூடாது, மீறி வென்றால், நியூயார்க் நகருக்கு வழங்கப்படும் பெடரல் வங்கியின் நிதி நிறுத்தப்படும் என நியூயார்க் நகர வாக்களார்களை டிரம்ப் கடுமையாக எச்சரித்திருந்தார். எனினும், நியூயார்க் நகர மக்கள் அவரை பொருட்படுத்தவில்லை.

நியூயார்க்கின் முதல் முஸ்லிம் மேயரானார் ‘ஸோரான் மம்தானி’!

ஸோரான் மம்தானி

Updated On: 

05 Nov 2025 15:42 PM

 IST

நியூயார்க், நவம்பர் 05: அமெரிக்க அதிபர் டிரம்பின் அரசியல் எதிரியான “ஸோரான் மம்தானி” நியூயார்க் நகரின் மேயர் போட்டியில் வெற்றி பெற்றார். அதோடு, முன்னாள் கவர்னர்களான Andrew cuoumo மற்றும் குடியரசு கட்சியின் Curtis sliwa-ஐ அவர் தோற்கடித்துள்ளார். அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை பரிசோதிக்கும் களமாக இந்த தேசிய தேர்தல் மாறியிருந்தது. அதன்படி, இத்தேர்தலில் நியூயார்க் சிட்டி உள்பட முக்கிய நகரங்களின் மேயர் பதவிக்கும், நியூ ஜெர்ஸி, விர்ஜீனியா ஆளுநர் பதவிகளும் கூடுதல் கவனத்தை பெற்றிருந்தன. இத்தேர்தலில் முக்கிய பதவிகளுக்கு அந்நாட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் மற்றும் தெற்காசிய வம்சாவளியினர் அதிக எண்ணிக்கையில் வேட்பாளர்களாக களம் கண்டிருந்தனர்.

மேலும் படிக்க: ரஷ்யாவை அடுத்து அடுத்து உலுக்கிய கடுமையான நிலநடுக்கம்.. பீதியில் பொதுமக்கள்!

முதல் முஸ்லிம் மேயர்:

அந்தவகையில், 34 வயதே ஆன இந்திய வம்சாவளியை சேர்ந்த, ‘ஸோரான் மம்தானி’ நியூயார்க்கின் இளம் மற்றும் முதல் முஸ்லிம் மேயராக வெற்றி பெற்றுள்ளார். இவர் இந்திய திரைப்பட இயக்குநர் மீரா நாயரின் மகன் ஆவார். குயின்ஸ் நகரின் சட்டமன்ற உறுப்பினரான மம்தானி கடந்தாண்டு மேயர் பதவிக்கான பிரச்சாரப் பணியில் இறங்கிய போது, மக்கள் மத்தியில், பெரிய பிரபலமாக இல்லாமல் இருந்தார். ஆனால், 1969ல் இருந்து நடந்து வரும் மேயர் தேர்தல்களில் 2025ல் நடந்த இந்த தேர்தலில் தான் 2 மில்லியன் வாக்காளர்கள் பங்கேற்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

டிரம்ப் பகிரங்க மிரட்டல்:

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், மம்தானி ஒரு ‘பைத்தியக்கார கம்யூனிஸ்ட்’, ‘அவர் வெற்றி பெற்றால் பேரழிவு’ என வெளிப்படையாக சாடி வந்தார். அதோடு, மம்தானி வெற்றி பெறக் கூடாது, மீறி வென்றால், நியூயார்க் நகருக்கு வழங்கப்படும் பெடரல் வங்கியின் நிதி நிறுத்தப்படும் என வாக்களார்களை எச்சரித்திருந்தார். ஆனால், டிரம்ப்பின் இந்த மிரட்டல்களுக்கு அஞ்சாத நியூயார்க் மக்கள் மம்தானியை தான் ஆதரித்துள்ளார்கள்.

டிரம்புக்கு அஞ்சமாட்டேன்:

மேலும் பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்த மம்தானி, நியூயார்க் நகர மக்களின் நன்மைக்காக டிரம்ப் உடன் சேர்ந்து பணி செய்வவேன். ஆனால் அடிபணியமாட்டேன் என்றும், நியூயார்க் மக்களின் வாழ்வை கடினமாக்கினால், ட்ரம்பை எதிர்த்து நிற்பேன் எனவும் துணிச்சலுடன் கூறியுள்ளார்.

நியூயார்க் நகரில் 8 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். உலகின் மிக முக்கியமான நகரங்களுள் முதன்மையான ஒன்று நியூயார்க். இந்நகரம், நிதி, தொழில்நுட்பம், கலை என எல்லாவற்றிற்கும் அடையாளமாக திகழ்கிறது. 2000க்கு மேற்பட்ட AI Startups மற்றும் பிற தொழிலாளார்களும் நியூயார்க்கை சார்ந்துள்ளனர். இங்கு மேயரின் பணி மிக முக்கியமான ஒன்றாகும்.

மேலும் படிக்க: Melissa Cyclone: ஜமைக்காவில் கடும் சேதத்தை ஏற்படுத்திய மெலிஸா புயல்!

ஆண்டு நிதியான 116 பில்லியன் டாலரை சரியான முறையில் உபயோகித்து, மக்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுப்பது மேயரின் கடமையாகும். நியூயார்க் சிட்டிக்கு ஆண்டுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 65 மில்லியன். அவர்களை கண்காணிப்பதும் மேயரின் பொறுப்பே. முன்னாள் மேயர்கள் இப்பதவியை, அமெரிக்க அதிபர் பதவியை அடையும் கருவியாக பயன்படுத்தி இருந்தார்கள். அதன்படி, மம்தானிக்கும் வருங்கால பிரதமாராக வேண்டுமென்ற ஆசை உண்டா என்பது தெரியவில்லை.