Donald Trump : ஐபோன்களுக்கு 25% வரி.. ஆப்பிள் நிறுவனத்தை எச்சரித்த டொனால்ட் டிரம்ப்!

Trump Threatens 25% Tariff on Apple iPhones | ஆப்பிள் நிறுவனம் தனது உற்பத்தி ஆலையை இந்தியாவில் நிறுவ உள்ளதாக கூறியுள்ளது. இதற்கு தொடர் எதிர்ப்புகளை தெரிவித்து வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், புதிய வித எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது அமெரிக்கா அல்லாத பிற நாடுகளில் தயாரிக்கப்படும் ஐபோன்களுக்கு வரி விதிக்கப்படும் என கூறியுள்ளார்.

Donald Trump : ஐபோன்களுக்கு 25% வரி.. ஆப்பிள் நிறுவனத்தை எச்சரித்த டொனால்ட் டிரம்ப்!

டொனால்ட் டிரம்ப்

Published: 

24 May 2025 10:57 AM

அமெரிக்கா, மே 24 : இந்தியாவிலோ அல்லது வேறு எந்த நாடுகளிலோ தயாரிக்கப்பட்டு அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் ஐபோன்களுக்கு (iPhones) 25 சதவீத வரி விதிக்கப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (America President Donald Trump) தெரிவித்துள்ளார். ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி ஆலையை அமைப்பதற்காக முடிவு செய்துள்ள நிலையில், அதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் டிரம்ப் இவ்வாறு எச்சரித்துள்ளார். இந்த நிலையில், வெளிநாடுகளில் ஐபோன் உற்பத்தி செய்வது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கையில் என்ன கூறப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவில் ஐபோன் உற்பத்தி ஆலையை அமைக்கும் ஆப்பிள் நிறுவனம்

உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது ஆப்பிள். ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களை உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்துகின்றனர். இவ்வாறு, ஆப்பிள் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் அதன் உற்பத்தி தேவையும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தனது புதிய உற்பத்தி ஆலையை திறக்க முடிவு செய்துள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் இந்த முடிவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இந்த நிலையில், நேற்று (மே 23, 2025) செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர் ஆப்பிள் நிறுவனம் வேறு நாடுகளில் உற்பத்தி ஆலையை தொடங்கினால் அமெரிக்காவில் ஆப்பிள் ஐபோன்களுக்கு வரி விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

ஐபோன்களுக்கு 25% வரி – ஆப்பிள் நிறுவனத்தை எச்சரித்து டொனால்ட் டிரம்ப்

நேற்று (மே 23, 2025) செய்தியாளர்கள் மத்தியில் பேசிய டொனால்ட் டிரம்ப், அவர்கள் தங்களது உற்பத்தி ஆலையை அமெரிக்காவில் நிறுவினால் எந்த வுத வரியும் இருக்காது. டிம் கூக் ஆப்பிள் உற்பத்தில் ஆலையை இந்தியாவில் அமைக்க உள்ளதாக கூறுகிறார். இந்தியாவில் உற்பத்தில் ஆலையை தொடங்கட்டும். ஆனால், அங்கு உற்பத்தி செய்யப்படும் ஐபோன்களை அமெரிக்காவில் வரி இல்லாமல் விற்பனை செய்ய முடியாது என்று கூறியுள்ளார்.