இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே கைது.. பகீர் குற்றச்சாட்டு.. பின்னணி என்ன?
Srilanka EX President Ranil Wickremesinghe Arrest : இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே கைது செய்யப்பட்டுள்ளார். கைதான இவரை, 2025 ஆகஸ்ட் 26ஆம் தேதி நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு நிதியை தவறாக பயன்படுத்தி புகாரில், அவர் கைதாகினார்.

ரணில் விக்ரசிங்கே கைது
இலங்கை, ஆகஸ்ட் 23 : இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே (Ranil Wickremesinghe Arrest) கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு நிதியை தவறாக பயன்படுத்திய புகாரில், ரணில் விக்ரமசிங்கே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அண்டை நாடான இலங்கையில் 2022ஆம் ஆண்டு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால், அத்தியாவசிய பொருட்களில் விலை கடுமையாக உயர்ந்தது. இதனால், உள்நாட்டில் பிரச்னை நிலவி வந்தது. உள்ளூர் மக்கள் போராட்டத்தை நடத்தினர். எனவே, நிதி நெருக்கடியை சமாளிக்க முடியாததால், அப்போது அதிபராக இருந்த கோத்தபய ராஜபச்சே நாட்டை விட்டு ஓடினார். இதனால், இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றார். இலங்கை அதிபராக 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 204 செப்டம்பர் மாதம் வரை பதவியில் இருந்தார்.
2024ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ரணில் விக்ரமசிங்கே தோல்வி அடைந்தார். இதனை அடுத்து, அதிபராக அநுர குமார திசாநாயக்க செயல்பட்டு வருகிறார். ரணில் விக்ரசிங்கே தனது பதவிக் காலத்தில் இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சரியாக கையாண்டு இருக்கிறார். இப்படியான நிலையில், முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே 2025 ஆகஸ்ட் 22ஆம் தேதியான நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். அரசு நிதியை தவறாக பயன்படுத்திய புகாரில், ரணில் விக்ரமசிங்கே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
Also Read : அமெரிக்காவின் 50 சதவீத வரி.. இந்தியாவுக்கு ஆதரவாக வந்த குரல்.. களமிறங்கிய சீனா!
கைதான இலங்கை முன்னாள் அதிபர்
Sri Lanka’s former president Ranil Wickremesinghe arrested on corruption charges, says police. pic.twitter.com/d5eJf4KdFQ
— Press Trust of India (@PTI_News) August 22, 2025
இதற்கிடையில், ரணில் விக்ரசிங்கேக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து, அவருக்கு ரணில் விக்ரசிக்கே 2025 ஆகஸ்ட் 26ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்கப்படுகிறார். 2023 செப்டம்பர் மாதத்தில் ரணில் விக்ரமசிங்கே அதிபராக இருந்தபோது, பிரிட்டிஷ் பல்கலைக்கழகத்தில் தனது மனைவிக்கான பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள லண்டனுக்குச் சென்றது குறித்து இலங்கை காவல்துறையின் குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரிகள் விக்கிரமசிங்கேவிடம் விசாரித்ததைத் தொடர்ந்து, அவர் கைதானார்.
பின்னணி என்ன?
2023 செப்டம்பர் மாதம் ரணில் விக்ரமசிங்கே கியூபாவின் ஹவானாவுக்குச் சென்றார். அங்கு அவர் ஜி77 மாநாட்டில் கலந்து கொண்டு பிறகு, அவர் லண்டனில் தங்கி தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார். இந்த பயணத்தில் ரணில் விக்ரசிங்கே உட்பட 10 பேர் சென்றதாக கூறப்படுகிறது.
இந்த பயணத்தின்போது சுமார் ரூ.17 மில்லியன் செலவிடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தப் பயணம் முழுவதும் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிக்காக அல்லாமல் தனிப்பட்ட காரணங்களுக்காக மேற்கொள்ளப்பட்டதாகவும் புகார்கள் கிளம்பியது. இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த ரணில் விக்ரமசிங்கே, தனது பயண செலவுகளை தனது மனைவியே ஏற்றுக்கொண்டதாகவும், அரசாங்கத்தின் பணம் தனிப்பட்ட நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படவில்லை என்றும் அவர் கூறுகிறார்.
Also Read : ஆப்கானிஸ்தான் பேருந்து விபத்து.. 19 குழந்தைகள் உட்பட 79 அகதிகள் உடல் கருகி பரிதாப பலி!
இது ஒரு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும், இந்த விஷயம் உண்மைகளுக்கு அப்பாற்பட்டது என்றும் அவர் கூறினார். ஆனால், போதுமான ஆதாரங்கள் கிடைத்த பின்னரே கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை கூறியது.