10 ஆண்டுகள் மர்மம்.. கூட்டம் கூட்டமாக இறந்த நட்சத்திர மீன்கள்.. உண்மையை கண்டுபிடித்த ஆய்வாளர்கள்!
Star Fish Death Mystery Found | வட அமெரிக்காவின் பெரும்பாலான கடல் பகுதிகளில் பில்லியன் கணக்கான நட்சத்திர மீன்கள் உயிரிழக்க தொடங்கின. கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் இவ்வாறு மர்மமான முறையில் நட்சத்திர மீன்கள் உயிரிழந்து வந்த நிலையில், அதற்கான காரணத்தை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

நட்சத்திர மீன்கள்
அமெரிக்கா, ஆகஸ்ட் 05 : அமெரிக்காவில் (America) கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கொத்து கொத்தாக நட்சத்திர மீன்கள் (Star Fish) உயிரிழந்து வந்த நிலையில், அதற்கான காரணம் தெரியாமல் ஆராய்ச்சியாளர்கள் குழம்பி வந்தனர். இந்த நிலையில், நீண்ட கால ஆய்வுக்கு பிறகு நட்சத்திர மீன்களின் உயிரிழப்புக்கான காரணத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இத்தனை ஆண்டு காலமாக நட்சத்திர மீன்களின் உயிரிழப்புக்கு பின்னால் வைரஸ் தொற்று இருக்கலாம் என ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், அதற்கு பின்னால் பாக்டீரியா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கொத்த கொத்தாக உயிரிழந்த நட்சத்திர மீன்கள்
வட அமெரிக்காவில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மரம்மான முறையில் 5 பில்லியனுக்கும் அதிகமான நட்சத்திர மீன்கள் உயிரிழந்துள்ள நிலையில், இந்த மாபெரும் பேரழிவுக்கான காரணத்தை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 2013 ஆம் ஆண்டு முதல் மெக்சிகோ முதல் அலஸ்கா வரை மர்மமான முறையில் ஆயிரக்கணக்கான நட்சத்திர மீன்கள் உயிரிழக்க தொடங்கியுள்ளன. இதன் காரணமாக 20-க்கும் மேற்பட்ட வகை நட்சத்திர மீன்கள் அழிவை சந்தித்துள்ளன. இதில் குறிப்பாக சூரியகாந்தி நட்சத்திர மீன் (Sunflower Star Fish) வகைகள் தங்களது ஒட்டுமொத்த எண்ணிக்கையில் 90 சதவீதத்தை இழந்திவிட்டன. தற்போது வரை இந்த மீன் இனத்தில் உயிரிழப்புகள் தொடர்ந்துக்கொண்டே வருகிறது.
இதையும் படிங்க : நிலநடுக்கத்திலும் அறுவை சிகிச்சை.. மருத்துவமனையில் டாக்டர் செய்த செயல்.. குவியும் பாராட்டு!
நட்சத்திர மீன்களில் நிலையை மோசமாக்கி உயிரை கொல்லும் பாக்டீரியா
ஆரோக்கியமான நட்சத்திர மீன்களுக்கு நல்ல ஊதிய கைகள் இருக்கும். ஆனால், பாக்டீரியா நொய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மீன்களிம் கைகள் மெல்லியதாக உள்ளது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நட்சத்திர மீன்களை மட்டுமன்றி ஷெல் மீன் வகைகளையும் இந்த பாக்டீரியா தாக்கியுள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த நட்சத்திர மீன்களின் மரணத்திற்கு பின்னால் உள்ள காரணத்தை கண்டுபிடிக்க ஆய்வாளர்களுக்கு சுமார் 10 ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளது. பல குழப்பங்களுக்கு மத்தியில் இந்த காரணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க : ஒரு குழந்தைக்கு ரூ.50,000.. மக்கள் தொகையை அதிகரிக்க சீனா கையில் எடுத்துள்ள புதிய முயற்சி!
நட்சத்திர மீன்களின் மரணத்திற்கு பின்னால் இருக்கும் மர்மம் விலகிய நிலையில், மீதமுள்ள நட்சத்திர மீன்கள் ஆரோக்கியமான உள்ளதா, அவற்றை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டுமா என்பது குறித்து ஆய்வாளர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமன்றி, இந்த நட்சத்திர மீன் வகைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளதா அல்லது ஏதேனும் நோய் எதிர்ப்பு செலுத்த வேண்டுமா என்பது குறித்து ஆய்வாளர்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.