PM Modi 5 Nation Tour : டிரினிடாட் அண்டு டுபாகோவில் பிரதமர் மோடி.. உற்சாக வரவேற்பு!

PM Modi Visit Trinidad Tobago : கானா பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி, 2025 ஜூலை 3ஆம் தேதி டிரினிடாட் அண்டு டுபாகோவுக்கு சென்றடைந்தார். அங்கு சென்ற பிரதமர் மோடிக்கு விமான நிலையத்திலேயே உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அங்கிருந்த இந்திய வம்சாவளியினருடன் பிரதமர் மோடி உரையாற்றினார்.

PM Modi 5 Nation Tour : டிரினிடாட் அண்டு டுபாகோவில் பிரதமர் மோடி.. உற்சாக வரவேற்பு!

பிரதமர் மோடி

Updated On: 

04 Jul 2025 08:06 AM

பிரதமர் மோடி தனது ஐந்து நாடுகள் சுற்றுப்பயணத்தின் (PM Modi 5 Nation Tour) இரண்டாவது கட்டமாக 2025 ஜூலை 3ஆம் தேதியான நேற்று டிரினிடாட் அண்டு டொபாகோவை (PM Modi Visit Trinidad Tobago) வந்தடைந்தார். போர்ட் ஆஃப் ஸ்பெயினில் உள்ள பியர்கோ சர்வதேச விமான நிலையத்தில் அவருக்கு மரியாதை அளிக்கப்பட்டது. அவரை கரீபியன் நாட்டின் பிரதமர் கமலா பிரசாத்-பிஸ்ஸேசர் மற்றும் 38 அமைச்சர்கள் மற்றும் நான்கு எம்.பி.க்கள் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடி தனது ஐந்து நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை 2025 ஜூலை2ஆம் தேதி தொடங்கினார். டெல்லியில் இருந்து அன்றைய தினம் புறப்பட்ட அவர், 2025 ஜூலை 3ஆம் தேதி கானா நாட்டிற்கு சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதோடு, அந்நாட்டின் உயரிய விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

பின்னர், கானா அதிபர் ஜான் மகாவாவை சந்தித்து இருநாடுகளுக்கான உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதோடு, பிரதமர் மோடி கானா நாட்டின் நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து 2025 ஜூலை 3ஆம் தேதி மாலை கானா நாட்டில் இருந்து புறப்பட்டு, டிரினிடாட் மற்றும் டொபாகோவுக்கு சென்றடைந்தார்.

டிரினிடாட் அண்டு டுபாகோவில் பிரதமர் மோடி

பியர்கோ சர்வதேச விமான நிலையத்தில் அவருக்கு மரியாதை அளிக்கப்பட்டது. அவரை கரீபியன் நாட்டின் பிரதமர் கமலா பிரசாத்-பிஸ்ஸேசர் வரவேற்பு அளித்தார். பிரதமராகப் பதவியேற்ற பிறகு கரீபியன் நாட்டிற்கு அவர் மேற்கொள்ளும் முதல் அதிகாரப்பூர்வ பயணம் இதுவாகும்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மக்கள் தங்கள் கைகளில் மூவர்ணக் கொடியை ஏந்தி பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளித்தனர். இந்தப் பயணத்தின் போது, ​​இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்காக பிரதமர் மோடி டிரினிடாட் மற்றும் டொபாகோவின் உயர்மட்டத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்.

2025 ஜூலை 4ஆம் தேதி ஒருநாள் அங்கு தங்கியிருக்கும் பிரதமர் மோடி, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்காக அதிபர் கிறிஸ்டின் கார்லா கங்கலு மற்றும் பிரதமர் கமலா பிரசாத்-பிஸ்ஸேசரை சந்தித்துப் பேசுவார்.

பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

இந்திய சமூகத்தினரிடையே பேசிய பிரதமர் மோடி

விவசாயம், தகவல் தொழில்நுட்பம், சுகாதாரம், மருந்துகள் மற்றும் எரிசக்தி ஆகிய விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார். குறிப்பாக, பிரதமர் மோடி தனது வரலாற்று சிறப்புமிக்க இரண்டு நாள் பயணத்தின் போது நாட்டின் மிக உயர்ந்த விருதான ஆர்டர் ஆஃப் டிரினிடாட் மற்றும் டொபாகோ விருதைப் பெறுவார்.

டிரினிடாட் மற்றும் டொபாகோ நாடாளுமன்றத்தின் கூட்டு அமர்விலும் அவர் உரையாற்ற உள்ளார். முன்னதாக, இந்திய சமூகத்தினரிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, “கமலா பெர்சாத்-பிஸ்ஸேசரின் மூதாதையர்கள் பீகாரில் உள்ள பக்சாரைச் சேர்ந்தவர்கள்.

மக்கள் அவரை பீகாரின் மகள் என்று கருதுகின்றனர். பீகாரின் கலாச்சார மரபு இந்தியாவிற்கும் உலகிற்கும் பெருமை சேர்க்கும் விஷயம். பீகார் பல நூற்றாண்டுகளாக பல்வேறு துறைகளில் உலகிற்கு வழி காட்டியுள்ளது. 21 ஆம் நூற்றாண்டிலும் பீகாரில் இருந்து புதிய வாய்ப்புகள் உருவாகும்” என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “இந்திய சமூகத்தினரின் பங்களிப்பு டிரினிடாட் மற்றும் டொபாகோவிற்கு கலாச்சார ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் பயனளித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பு இன்னும் வலுவாக வளர்ந்துள்ளது. இந்திய சமூகம் எங்கள் பெருமை. நான் அடிக்கடி கூறியது போல், நீங்கள் ஒவ்வொருவரும் இந்தியாவின் மதிப்புகள், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் தூதர்” என கூறினார்.