Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கானா சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு உயரிய விருது வழங்கி கௌரவம்!

Indian Prime Minister Narendra Modi's Ghana Visit | 5 நாடுகளுக்கு மொத்தம் 8 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதல் நாளான நேற்று (ஜூலை 2, 2025) ஆப்ரிக்காவின் கானா நாட்டிற்கு சென்றார். அங்கு அவருக்கு பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கானா சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு உயரிய விருது வழங்கி கௌரவம்!
பிரதமர் மோடிக்கு கானாவின் உயரிய விருது
vinalin-sweety
Vinalin Sweety | Updated On: 03 Jul 2025 09:18 AM

கானா, ஜூலை 03 : இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Indian Prime Minister Narendra Modi) ஆப்ரிக்கா ஒன்றியத்தின் கானா நாட்டிற்கு சென்றார். அங்கு சென்ற அவர் நேற்று (ஜூலை 02, 2025) கானா அதிபர் ஜான் திராமணி மஹாமாவை சந்தித்து பேசினார். முன்னதாக கானா சென்ற பிரதமர் நரேந்திர மோடியை, அந்த நாட்டு அதிபர் ஜான் திராமணி மஹாமா, விமான நிலையத்தில் கட்டி அணைந்து வரவேற்றார். இந்த உற்சாக வரவேற்புக்கு பிறகு இந்திய பிரதமர் மோடி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று உரையாற்றினார். அதில் இந்தியா மற்றும் கானா இடையேயான உறவு குறித்து அவர் பேசியுள்ளார். இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் கானா பயணம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

8 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, 5 நாடுகளுக்கு 8 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த சுற்றுப்பயணத்தின் முதல் நாளான நேற்று (ஜூலை 02, 2025) ஆப்பிரிக்காவின் கானாவுக்கு சென்றார். அங்கு அவருக்கு விமான நிலையத்தில், கானாவின் பாரம்பரிய முறைப்படி 21 துப்பாக்கிகள் ஏந்தி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கானாவின் உயரிய விருதான “The Officer of the Order of the Star of Ghana” என்ற விருது வழங்கப்பட்டது. அதுமட்டுமன்றி, 30 ஆண்டுகளுக்குப் பிறகு கானாவுக்கு சென்ற இந்திய பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளதால் இது வரலாற்று சிறப்புமிக்கதாக அமைந்துள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு உயரிய விருது

இதனை தொடர்ந்து நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, பயங்கரவாதம் மனிதகுலத்தின் எதிரி என்பதில் நாங்கள் ஒருமனதாக இருக்கிறோம். பயங்கராவத்திற்கு எதிரான எங்களது போராட்டத்திற்கு கானா ஒத்துழைப்பு வழங்குவதற்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். மேலும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் எங்கள் ஒத்துழைப்பை வலுப்படுத்த முடிவு செய்துள்ளோம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி

தொடர்ந்து பேசிய அவர், கானாவின் தேசத்தை கட்டியெழுப்பும்  பயணத்தில் இந்தியா வெறும் ஒரு கூட்டாளி மட்டும் அல்ல. சக பயணியாகவும் உள்ளது என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.