12 பேருக்கு விஷ ஊசி செலுத்தி கொலை செய்த மருத்துவர்.. ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்!

Paris Doctor Killed 12 By Injecting Poison Injection | பிரான்சின் பாரிஸ் பகுதியை சேர்ந்த 53 வயது மருத்துவர் ஒருவர் 30 பேருக்கு விஷ ஊசி செலுத்தியுள்ளார். இதில் 12 பேர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

12 பேருக்கு விஷ ஊசி செலுத்தி கொலை செய்த மருத்துவர்.. ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்!

கொலை செய்த மருத்துவர்

Updated On: 

21 Dec 2025 16:23 PM

 IST

பாரீஸ், டிசம்பர் 21 : பிரான்சின் (France) பெசான்கான் நகரை சேர்ந்தவர் பிரடெரிக் பெஷியர். 53 வயதாகும் இவர் ஒரு மருத்துவர் ஆவார். மருத்துவர்கள் பொதுமக்களின் உயிர்களை காப்பாற்றும் நிலையில், இவர் 12 பேரை விஷ ஊசி செலுத்தி கொலை செய்ததாக இவர் மீது புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில், புகாரின் அடிப்படையில் அவரை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜர் படுத்தியுள்ளனர். அங்கு அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.

30 பேருக்கு விஷ ஊசி செலுத்திய மருத்துவர்

அந்த மருத்துவர் நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்யும்போது மயக்கம் அடைவதற்காக பொட்டாசியம் குளோரைடு கலந்த விஷ ஊசியை செலுத்தியுள்ளார். இதன் காரணமாக ஊசி செலுத்தப்பட்ட நபர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் அவரே அந்த நபர்களுக்கு சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றி புகழ் பெற்றுள்ளார். இவ்வாறு 2008 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை அவர் தொடந்து நோயாளிகளுக்கு விஷ ஊசி செலுத்தி வந்துள்ளார். சுமார் 13 ஆண்டுகளாக அவர் இந்த கொடூர செயலை செய்துள்ளார்.

இதையும் படிங்க : அமெரிக்காவில் கர்ப்பிணிக்கு நேர்ந்த சம்பவம்…குடியேற்ற முகவரின் கொடுஞ்செயல்!

சிகிச்சை பலன் அளிக்காமல் பலியான 12 பேர்

அந்த மருத்துவர் 13 ஆண்டுகளில் 30 பேருக்கு விஷ ஊசி செலுத்திய நிலையில், அவர்களில் 12 பேர் சிகிச்சை பலன் அளிக்காமல் பலியாகியுள்ளனர். மருத்துவரின் இந்த வாக்குமூலத்தை கேட்டு நீதிமன்றத்தில் இருந்த நீதிபதிகள் உள்ளிட்ட அனைவரும் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இந்த நிலையில் வேண்டும் என்றே விஷ ஊசி செலுத்தி 12 பேரை கொலை செய்த மருத்துவர் பிரடெரிக் பெஷியருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

இதையும் படிங்கா : தலையை துளைத்துச்சென்ற துப்பாக்கி குண்டு.. உஸ்மான் ஹாடி மரணம்.. மீண்டும் வன்முறைக்களமாகும் வங்கதேசம்!

நோயாளிகளின் உயிரை காப்பாற்ற வேண்டிய மருத்துவரே அவர்களுக்கு விஷ ஊசி செலுத்தி கொலை செய்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், மருத்துவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்... அவருக்கு உடலில் இப்படி ஒரு பிரச்சனையா?
ஹிமாச்சலின் வறண்ட டிசம்பர்.. வெப்பமயமாதலால் பனி இல்லாத நிலை!
ஜிபிஎஸ் டிராக்கருடன் கிடைத்த வெளிநாட்டு கடற்புறா - பரபரப்பு தகவல்
ஏஐ காதலரை திருமணம் செய்துகொண்ட ஜப்பானிய பெண்