Coronavirus : மீண்டுமா? பரவும் கொரோனா தொற்று.. பாதித்த சிங்கப்பூர், ஹாங்காங்!
Covid Virus in Singapore Honkong : சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கில் கொரோனா தொற்று பரவுவது அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா பாதிப்பால் உலக நாடுகள் பேரழிவை சந்தித்து, சில ஆண்டுகளாக தான் இயல்பி நிலையில் உள்ளது. இந்த நிலையில், மீண்டும் ஆசிய நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனா பாதிப்பு
கொரோனா தொற்று (Covid 19) மீண்டும் அதிகரிக்க துவங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக, ஆசியா நாடுகளில் இந்த கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதாக தெரிகிறது. இதனால், அங்குள்ள சுகதாதாரத்துறை அதிகாரிகள் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் பரவிய கொரோனா தொற்று, உலக நாடுகளை புரட்டி போட்டது. சீனாவில் பரவிய கொரோனா தொற்று, மெல்ல மெல்ல பல்வேறு நாடுகளில் பரவியது. இந்தியாவில் கொரோனா தொற்றால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். மேலும், பல்வேறு நாடுகளிலும் மக்கள் உயிரிழந்தனர். அதன்பிறகு, கொரோனா தடுப்பூசி தொடங்கி பல்வேறு சுகாதார நடவடிக்கையால் கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
பரவும் கொரோனா தொற்று
அதன்பிறகு பெரிதாக கொரோனா பரவில் இல்லாமல் இருந்தது. ஆனால், அவ்வப்போது அதற்கான அறிகுறிகளுடன் ஒருசிலருக்கு இருக்கிறது. அண்மையில் கூட, சீனாவில் எச்எம்பிவி என்ற கொரோனா தொற்று பரவியது. தற்போது கொரோனா அலையில் இருந்து மக்கள் இயல்பை நிலைக்கு திரும்பி இருக்கிறது.
இந்த நிலையில், மீண்டும் ஆசிய நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதாக தெரிகிறது. அதாவது, ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் கொரோனா பரவி அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அங்குள்ள சுகதாதாரத்துறை அதிகாரிகள் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து ஹாங்காங்கின் சுகாதாரப் பாதுகாப்பு மையத்தின் தொற்று நோய்ப் பிரிவின் தலைவரான ஆல்பர்ட் ஆவ் கொரோனா வைரஸின் செயல்பாடு அதிகமாக உள்ளதாக கூறினார். மேலும், 2025 மே 3ஆம் தேதியில் இருந்து ஹாங்காவில் கொரோனா தொற்றால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதாக கூறியுள்ளார்.
பாதித்த சிங்கப்பூர், ஹாங்காங்
இதுகுறித்து வெளியான தரவுகளின்படி, மே 3ஆம் தேதிக்கு பிறகு ஹாங்காங்கில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 31ஆக உயர்ந்துள்ளது. இது சுமார் ஒரு வருடத்தில் மிக உயர்ந்த அளவாகும். சுமார் ஏழு மில்லியன் மக்கள் வசிக்கும் ஹாங்காங்கில் கோவிட் பாதிப்புகள் கடந்த இரண்டு ஆண்டுகளைப் போல அதிகமாக இல்லை என்றாலும், சில காரணங்களால் அங்கு கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனால், அங்கு மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
சிங்கப்பூரை பொறுத்தவரை, ஒரு வருடத்திற்கு பிறகு கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. சிங்கப்பூரில் 2025 மே 3ஆம் தேதி முதல் சுமார் 28 சதவீதம் கொரோனா பரவில் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. கிட்டதட்ட கொரோனா தொற்று எண்ணிக்கை 14,200 ஆக உயர்ந்துள்ளது. தினசரி மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் 30 சதவீதம் அதிகரித்துள்ளது.
மக்கள் தொகை அதிகரித்து, நோய் எதிர்ப்பு குறைவது போன்ற காரணங்களால் கொரோனா வைரஸ் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. மேலும், கொரோனா காலக்கட்டத்தில் இருந்ததை விட, தற்போது அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அறிகுறிகள் எதுவும் என சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.