பிரான்ஸ் மன்னர் நெப்போலியனின் வைர நகைகள் கொள்ளை.. பகீர் சம்பவம்!
Napoleon's Diamond Jewels Stolen in Paris | பிரான்ஸ் மன்னர் நெப்போலியனின் வைர நகைகள் சில பாரிசில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் வைத்து பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், அந்த நகைகள் நேற்று (அக்டோபர் 19, 2025) கொள்ளையடிப்பட்டுள்ளன.

கொள்ளையடிக்கப்பட்ட நகைகள்
பாரிஸ், அக்டோபர் 20 : பிரான்ஸ் மன்னர் நெப்போலியனின் (France King Nepoleon) வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீவிர பாதுகாப்பு வளையத்தில் வைத்து பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு வந்த அந்த நகைகள் நேற்று (அக்டோபர் 19, 2025) கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், அருங்காட்சியகத்தில் இருந்த நெப்போலியனின் நகைகள் திருபட்டது குறித்து விரிவாக பார்க்கலாம்.
மன்னர் நெப்போலியனின் வைர நகைகள் கொள்ளை
பிரான்ஸ் நாட்டின் மன்னராக இருந்தவர் தான் நெப்போலியன். இவர் பல நாடுகளின் மீது படையெடுத்து தனது ஆட்சியை விரிவுப்படுத்தினார். இவரது மறைவுக்கு பிறகு, அவர் பயன்படுத்திய 9 வைர நகைகள் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள லவ்ரி அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டு வந்தது. பொதுவாக வரலாற்று சிறப்புமிக்க பொருட்கள் அருங்காட்சியகத்தில் வைக்கப்படும் நிலையில், அவற்றை ஏராளமான பொதுமக்கள் மிகவும் ஆர்வத்துடன் பார்வையிடுவர். அந்த வகையில், நெப்போலியனின் இந்த நகைகளை காண நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அந்த அருங்காட்சியகத்திற்கு வந்து சென்றுள்ளனர்.
இதையும் படிங்க : 2026-ல் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்படும்.. பதற வைக்கும் பாபா வங்காவின் கணிப்பு!
நெப்போலியனின் 9 வைர நகைகள் கொள்ளை
பலத்த பாதுகாப்புடன் காட்சிப்படுத்தப்பட்டு வந்த நெப்போலியனின் நகைகள் நேற்று (அக்டோபர் 19, 2025) கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. நேற்றைய தினம் வழக்கம் போல அருங்காட்சியகம் திறக்கப்பட்ட நிலையில், ஏராளமான பொதுமக்கள் மிகவும் ஆர்வத்துடன் அருங்காட்சியகத்தை கண்டுகளித்தனர். அப்போது அருங்காட்சியத்துக்குள் நுழைந்த கொள்ளையர்கள் அங்கு வைக்கப்பட்டு இருந்த நெப்போலியனின் 9 வைர நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இதையும் படிங்க : கோல்ட்ரிஃப் மட்டும் இல்லை.. இந்த 3 மருந்துகளுக்கும் தடை.. எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு
பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு இருந்த மன்னர் நெப்போலியனின் வைர நகைகள் கொள்ளையடிப்பட்டது குறித்து தெரிய வந்த நிலையில், அருங்காட்சியக ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில், இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அருங்காட்சியகத்தில் சோதனை மேற்கொண்டுள்ளனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், கொள்ளை கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். பயங்கர பாதுகாப்புடன் அருங்காட்சியகத்தில் வைத்து காட்சிப்படுத்தப்பட்டு வந்த பிரான்ஸ் மன்னர் நெப்போலியனின் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.