அமெரிக்காவை வாட்டி வதைக்கும் பனிப்புயல்கள்.. 5.5 கோடி மக்கள் பாதிப்பு!
Dangerous Snow Storms Hits America | அமெரிக்காவில் தற்போது குளிர்காலம் நிலவி வருகிறது. இதன் காரணமாக அங்கு ஏற்படும் பனிபுயல்களால் மக்கள் மிகுந்த பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக 5.5 கோடி மக்கள் பனிப்புயலால் அங்கு மிக கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளனர்.

கடும் பனிப்பொழிவு
வாஷிங்டன், டிசம்பர் 04 : உலகில் உள்ள ஒவ்வொரு நாடுகளும் ஒவ்வொரு விதமான வித்தியாசமான காலநிலையை கொண்டு இருக்கும். சில இடங்களில் அதிக அளவு குளிரும், சில இடங்களில் அதிக அளவு வெப்பமும் இருக்கும். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இதில் மாற்றம் ஏற்படும். அந்த வகையில், அமெரிக்காவில் (America) நவம்பர் முதல் மார்ச் வரை குளிர்காலம் (Winter Season) இருக்கும். அந்த காலக்கட்டத்தில் அமெரிக்காவை மிக கடுமையாப பனி புயல்கள் (Snow Storm) தாக்கும்.
அமெரிக்காவை வாட்டி வதைக்கும் மிக கடுமையான பனிப்புயல்கள்
தற்போது அமெரிக்காவில் கடுமையான குளிர் காலம் நிலவி வரும் நிலையில், பனி புயல்கள் தாக்கி வருகின்றன. அங்கு கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இரண்டு பனி புயல்கள் தாக்கியுள்ளன. இந்த நிலையில் தான், அங்கு மூன்றாவது பனிபுயல் ஒன்று உருவாகியுள்ளது. இந்த பனிப்புயல் அதி தீவிர பனிபுயலாக மாறியுள்ளதால், அது அங்கு மிக கடுமையான சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : 62 வயதில் காதலியை கரம் பிடித்த ஆஸ்திரேலியா பிரதமர்.. உலக தலைவர்கள் வாழ்த்து!
5.5 கோடி மக்கள் பனிப்புயலால் பாதிப்பு
அமெரிக்காவில் உருவாகியுள்ள இந்த அதிதீவிர பனிபுயல் காரணமாக அங்கு சுமார் 5.5 கோடி பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக அமெரிக்காவின், கொலராடோ மாகாணத்தில் ராக்கி மலைப்பகுதியில் ஒரு அடி உயரத்திற்கு பனி விழுந்துள்ளது. இதேபோல கன்சாஸ் நகரத்தில் 10 செ.மீ அளவும், செயின்ட் லூயிஸ் நகரத்தில் 7 செ.மீ அளவும் மிக கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க : காதலனுடன் கடற்கரையில் குளித்த இளம் பெண்.. சுறா கடித்து பரிதாப பலி!
அதிதீவிர பனிப்புயல் எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்
இதன் காரணமாக சில பகுதிகளுக்கு வானிலை ஆய்வு மையம் அதிதீவிர புயலுக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அமெரிக்காவின் வடமேற்கில் உள்ள மோண்டானா முதல் கிழக்கு கடற்கரையில் உள்ள மைனே வரை சுமார் 2,500 கி.மீ நீளத்துக்கு சுமார் 27 மாகாணங்களுக்கு வானிலை அமெரிக்காவின் வானிலை ஆய்வு மையம் அதிதீவிர புயலுக்கான எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த தீவிர பனிப்புயல்கள் காரணமாக அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.