பிலிப்பைன்ஸில் 7.6 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. சுற்றுவட்டார பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை..
Philippines Earthquake: பிலிப்பைன்ஸில் 7.6 அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் அனைத்தும் கடுமையாக குலுங்கின. சில கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. மக்கள் வீதிகளில் பீதி அடைந்து வெளியேறினர்.இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்பான காட்சிகள் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வைரலாகி வருகின்றன.

கோப்பு புகைப்படம்
பிலிப்பைன்ஸ், அக்டோபர் 10, 2025: பிலிப்பைன்ஸில் அக்டோபர் 10, 2025, பேதியான இன்று 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டின் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதோடு, கடலோரங்களில் வசிக்கும் மக்களை அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் வால்கனாலஜி அண்ட் செஸ்மாலஜி தெரிவித்ததாவது, மிண்டனாவோவின் தாவோ ஓரியண்டலில் உள்ள மனே நகருக்கு அருகில், கடலில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகும். இந்த அதிர்வுக்குப் பிறகு, பிலிப்பைன்ஸ் கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் உயரமான பகுதிகளுக்கோ அல்லது உள்நாட்டுக்குள் செல்லுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது வரை இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் அல்லது சேதம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. நிலநடுக்கத்தின் இமையத்திலிருந்து 186 மைல் தூரத்துக்குள் ஆபத்தான அலைகள் எழக்கூடும் என்றும், ஹவாயில் உள்ள பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. பிலிப்பைன்ஸ் கடற்கரையின் சில பகுதிகளில் மூன்று மீட்டர் உயரம் வரை அலைகள் எழக்கூடும் என்றும், இந்தோனேசியா மற்றும் பலாவ் பகுதிகளில் சிறிய அலைகள் எதிர்பார்க்கப்படுகின்றன என்றும் கூறப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் பல்வேறு பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை:
Damage from 7.4 earthquake in Tagum, Philippines
— Brian’s Breaking News and Intel (@intelFromBrian) October 10, 2025
இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் அனைத்தும் கடுமையாக குலுங்கின. சில கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. மக்கள் வீதிகளில் பீதி அடைந்து வெளியேறினர். பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்பான காட்சிகள் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வைரலாகி வருகின்றன.
மேலும் படிக்க: அசைவ உணவு சாப்பிட்டவர் பலி.. நடுவானில் விமானத்தில் ஷாக் சம்பவம்… நடந்தது என்ன?
ஆசியாவின் மிகவும் ஆபத்தான டெக்டானிக் மண்டலங்களில் ஒன்றாகக் கருதப்படும் பகுதியில் இது ஒரு தீவிரமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம், நிலநடுக்க மையத்திலிருந்து 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடலோரப் பகுதிகளில் ஆபத்தான அளவில் சுனாமி அலைகள் எழக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. அதே சமயம், இந்தோனேசியாவின் புவியியல் ஆய்வு மையம், தெற்கு பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட இந்த வலுவான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து வடக்கு சுலவேசி மற்றும் பப்புவா பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிலிப்பைன்ஸில் தொடரும் நிலநடுக்கம்:
பிலிப்பைன்ஸில் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது. கடந்த முறை செப்டம்பர் 30, 2025 அன்று 6.9 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 74 பேர் உயிரிழந்தனர். பிலிப்பைன்ஸ் நாடு “பசிபிக் ரிங் ஆஃப் ஃபயர்” எனப்படும் எரிமலை மற்றும் நில அதிர்வு பகுதிகளில் அமைந்துள்ளது. இதனால் அங்கு அடிக்கடி நிலநடுக்கங்களும் எரிமலை வெடிப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.