Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நேபாளத்தில் பயங்கர நிலநடுக்கம்.. 4.3 ரிக்டர் அளவாக பதிவு.. மக்களின் நிலை என்ன?

Nepal Earthquake : நேபாளத்தில் 2025 மே 23ஆம் தேதியான இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 4.3 ரிக்டர் அளவுகோலில் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை தேசிய நில அதிர்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது. நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.

நேபாளத்தில் பயங்கர நிலநடுக்கம்.. 4.3 ரிக்டர் அளவாக பதிவு.. மக்களின் நிலை என்ன?
நேபாளத்தில் நிலநடுக்கம்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 23 May 2025 08:18 AM

நேபாளம், மே 23 : நேபாளத்தில் 2025 மே 23ஆம் தேதியான இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது (Nepal Earthquake). இந்த நிலநடுக்கம் 4.3 ரிக்டர் அளவுகோலில் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை தேசிய நில அதிர்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நிலநடுக்கம் இந்திய நேரப்படி நள்ளிரவு 1:33 மணிக்கு பதிவாகி உள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர் என்று தெரிகிறது. அண்மைக் காலங்களில் உலக நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.  இதனால், அந்த நாடுகளில் சேதங்களும், உயிரிழப்புகளும் நடந்து வருகின்றன. சமீபத்தில் கூட, மியான்மர் மற்றும்  தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் உலக நாடுகளை அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

நேபாளத்தில் பயங்கர நிலநடுக்கம்

7.7 ரிக்டர் அளவுகோலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 3,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.  இந்த பெரும் தாக்கத்தை அடுத்து, அந்த நாடுகளில் பொருளாதார சிக்கல்களும் ஏற்பட்டன. இந்த நிலையில், நேபாளத்தில் 2025 மே 23ஆம் தேதியான இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நேபாளத்தில் உள்ளூர் நேரப்படி 1.33 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 4.3 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள தேசிய நில அதிர்வு மையம், நேபாளத்தில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறியுள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அல்லது சேதங்கள் குறித்த தகவல் எதுவும் வெளிவரவில்லை. இருப்பனும், அந்நாட்டு அதிகாரிகளை நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். முன்னதாக, 2025 மே 20ஆம் தேதி மேற்கு நேபாளத்தின் காஸ்கி மாவட்டத்தில் 4.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

2வது முறை நிலநடுக்கம்


காத்மாண்டுவிலிருந்து சுமார் 250 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காஸ்கி மாவட்டத்தில் உள்ள சினுவா பகுதியை மையமாகக் கொண்ட இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் தனஹு, பர்வத் மற்றும் பாக்லுங் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. எனவே, ஒரே வாரத்தில் நேபாளத்தில் இரண்டு முறை நிலடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. 2015ஆம் ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் பேரழிவை ஏற்படுத்தியது. இந்த நிலநடுக்கத்தில் 9,000 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அடிக்கடி மன அழுத்தம் ஏற்படுதா? இந்த எளிய டிப்ஸ்களை டிரை பண்ணுங்க
அடிக்கடி மன அழுத்தம் ஏற்படுதா? இந்த எளிய டிப்ஸ்களை டிரை பண்ணுங்க...
தினமும் காலையில் ஊறவைத்த பாதாமை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?
தினமும் காலையில் ஊறவைத்த பாதாமை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?...
கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுக்கிறீர்களா? காத்திருக்கும் ஆபத்து!
கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுக்கிறீர்களா? காத்திருக்கும் ஆபத்து!...
சென்னையின் இந்த 5 இடங்களில் அமைதியாக நட்சத்திரங்களை ரசிக்கலாம்!
சென்னையின் இந்த 5 இடங்களில் அமைதியாக நட்சத்திரங்களை ரசிக்கலாம்!...
இப்படி இருந்தால் சுகர்தான்.. தோலில் தெரியும் சில அறிகுறிகள்!
இப்படி இருந்தால் சுகர்தான்.. தோலில் தெரியும் சில அறிகுறிகள்!...
டெல்லியில் சோனியா, ராகுல் காந்தியை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்..
டெல்லியில் சோனியா, ராகுல் காந்தியை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்.....
'தக் லைஃப்' இசை வெளியீட்டு விழா குறித்து வெளியான வீடியோ!
'தக் லைஃப்' இசை வெளியீட்டு விழா குறித்து வெளியான வீடியோ!...
சர்க்கரை நோயை கட்டுப்படுத்த 7 எளிய பழக்கங்கள்
சர்க்கரை நோயை கட்டுப்படுத்த 7 எளிய பழக்கங்கள்...
முகத்தை பளபளப்பாக்கும் கொத்தமல்லி இலை.. இப்படி ட்ரை பண்ணுங்க!
முகத்தை பளபளப்பாக்கும் கொத்தமல்லி இலை.. இப்படி ட்ரை பண்ணுங்க!...
கூலி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோவை வெளியிட்ட படக்குழு
கூலி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோவை வெளியிட்ட படக்குழு...
'டூரிஸ்ட் பேமிலி' படக்குழுவை நேரில் சந்தித்துப் பாராட்டிய சூர்யா!
'டூரிஸ்ட் பேமிலி' படக்குழுவை நேரில் சந்தித்துப் பாராட்டிய சூர்யா!...