நடுவானில் பைலட் இல்லாமல் பறந்த விமானம்.. கதிகலங்கிய 200 பயணிகள்.. அடுத்து என்ன?

lufthansa flight : நடுவானில் விமானி இல்லாமல் விமானம் 10 நிமிடங்கள் பறந்துள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 200 பயணிகளுடன் சென்ற விமானத்தில், விமானி கழிவறையில் இருந்தபோது, துணை விமானி மயக்கமடைந்துள்ளார். இதனை அடுத்து, விமானம் விமானியின் செயல்பாடு இல்லாமல் பறந்துள்ளது.

நடுவானில் பைலட் இல்லாமல் பறந்த விமானம்.. கதிகலங்கிய 200 பயணிகள்.. அடுத்து என்ன?

விமானம்

Updated On: 

18 May 2025 10:37 AM

சென்னை, மே 18 : 200 பயணிகளுடன் சென்ற விமான, விமானி இல்லாமல் 10 நிமிடங்கள் நடுவானில் பறந்தது பயணிகளை கதிகலங்க வைத்துள்ளது. அதாவது, விமான கழிவறையில் இருந்தபோது, துணை விமானி விமானத்தை இயக்கி இருக்கிறார். அப்போது, அவர் திடீரென மயக்கம் மடைந்துள்ளார். இதனால், 10 நிமிடங்கள் விமானி செயல் இல்லாமல் விமானம் நடுவானில் பறந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   சமீப காலமாகவே விமானங்கள் சர்ச்சையான சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக, பயணிகள் விமான பணியாளர்களை தாக்குதல், திடீரென அவசர கதவுகளை, விமானத்தில் சக பயணிகள் இடையே தகராறில் ஈடுபடுவது போன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன. ஆனால், விமானியே இல்லாமல் நடுவானில் விமானம் பறந்தது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

நடுவானில் பைலட் இல்லாமல் பறந்த விமானம்

ஸ்பெயினுக்குச் சென்ற லுஃப்தான்சா விமானத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அதாவது, 2025  பிப்ரவரி 17ஆம் தேதி  பிராங்பேர்ட்டில் இருந்து ஸ்பெயினுக்கு சென்ற விமானத்தில் 199 பயணிகள் மற்றும் ஆறு பணியாளர்கள் இருந்தனர். அப்போது, விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தது.

அந்த நேரத்தில், விமானி கழிவறைக்கு சென்றிருக்கிறார். அப்போது, துணை விமானி விமானத்தை இயக்கிய கொண்டிருந்தபோது, திடீரென மயக்கமடைந்துள்ளார். இதனால், விமானம் விமான வரும் வரை, 10 நிமிடங்கள் விமானி இல்லாமல் பயணித்துள்ளது. விமானி கேப்டன் கழிப்பறையிலிருந்து வெளியே வந்ததும், கேபின் கதவைத் திறக்க தட்டினார்.

ஆனால் கதவு திறக்கவில்லை. அதன் பிறகு கேப்டன் அவசர பொத்தானை அழுத்தி உதவி கேட்டார். ஐந்து முறை கதவை தட்டியிருக்கிறார். ஆனால், துணை விமானி திறக்காததை அடுத்து, விமானத்தில் இருந்து பணிப்பெண், தொலைபேசி வாயிலாக காக்பிட்டில் மயங்கி கிடக்கும் விமானியை தொடர்பு கொள்ள முயன்றார். இதற்கிடையில் துணை விமானி சுயநினைவு பெற்று காக்பிட் கதவை திறந்துள்ளார். இது முழுமையாக 10 நிமிடங்கள் நடந்தன. இதன்பின் விமானம் சீராக இயக்கப்பட்டு, மாட்ரிட்டில் தரையிறங்கியது.

அடுத்து என்ன?

தரையிறங்கிய உடன்  விமானி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இந்த சம்பவம் 2024ஆம் ஆண்டு நடந்திருந்தாலும், தற்போது அதுகுறித்து விசாரணை அறிக்கை வெளியானதால், வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மருத்துவ பரிசோதனையில், துணை விமானிக்கு நரம்பியல் பிரச்னை இருப்பதாகவும், இதனால், அவர் வலிப்பு ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது.

ஸ்பெயினின் விபத்துகள் குறித்து விசாரணை ஆணையத்திடம் சமர்பித்த அறிக்கையில் மூலும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பாக தங்களின் கவனத்திற்கு வந்துள்ளதாகவும், லுஃப்தான்சா நிறுவனம் சார்பில் விசாரணை நடதத்தப்படும் கூறியுள்ளது. மேலும், இந்த சம்பவம் குறித்து வேறு எதுவும் கூற முடியாது என்றும் லுஃப்தான்சா நிறுனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.