மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் மேடையில் தவறி விழுந்த ஜமைக்கா அழகி!

Jamaica Contestant Fell on Stage | தாய்லாந்தின் பாங்காக் நகரில் 74வது மிஸ் யுனிவர்ஸ் போட்டி நடைபெற்றது. இதில் உலகம் முழுவதிலும் இருந்து 120 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்த நிலையில், மேடையில் கேட் வாக் செய்த ஜமைக்கா அழகி தவறி விழுந்தார்.

மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் மேடையில் தவறி விழுந்த ஜமைக்கா அழகி!

ஜமைக்கா போட்டியாளர்

Updated On: 

22 Nov 2025 10:15 AM

 IST

பாங்காக், நவம்பர் 22 : தாய்லாந்தின் (Thailand) பாங்காக் (Bangkok) நகரில் 74வது மிஸ் யுனிவர்ஸ் போட்டி (74th Miss Universe Pageant) நடைபெற்றது. இந்த போட்டியில் 120 உலக நாடுகளில் இருந்து அழகிகள் பங்கேற்றனர். அவர்கள் ஒவ்வொருவரும் மேடையில் தங்களது தனித்திறமைகளை வெளிக்காட்டினர். அழகி போட்டியில் கேட் வாக் மிகவும் முக்கியமான அம்சமாக கருதப்படும் நிலையில், மேடையில் கேட் வாக் செய்துக்கொண்டு இருந்தபோது ஜமைக்கா போட்டியாளர் தவறி விழுந்தார். தற்போது இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மேடையில் கேட் வாக் செய்யும்போது தடுமாறிய ஜமைக்கா போட்டியாளர்

மிஸ் யுனிவர்ஸ் போட்டியின் ஒரு பகுதியாக கேட் வாக் நடைபெற்ற நிலையில், 120 உலக நாடுகளை சேர்ந்த அழகிகளும் கேட் வாக் செய்தனர். அந்த வகையில் ஜமைக்கா போட்டியாளரான கபிரியெல்லே கென்ஹியும் மேடையில் ஒய்யாரமாக நடந்துச் சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் கால் இடறி மேடையில் விழுந்துள்ளார். இதனை கண்டு பதறிப்போன நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உடனடியாக ஓடிச் சென்று அவரை மேலே தூக்கி விட்டனர். இந்த சம்பவத்தில் அவருக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை.

இதையும் படிங்க : இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலை.. அச்சுற்றுத்தும் கரும்புகை.. பொதுமக்கள் அச்சம்!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் ஆரஞ்சு நிறத்தில் உடை அணிந்து ஒய்யரமாக நடைபோடும் ஜமைக்கா போட்டியாளர், மேடையின் இறுதி அவரை சென்று பிறகு மீண்டும் திரும்பி நடந்துச் செல்லும்போது கீழே விழுகிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க : ஷேக் ஹசீனாவை நாடு கடத்த தீவிர முயற்சி: இண்டர்போல் உதவியை நாடும் முடிவில் வங்கதேசம்!

இந்த போட்டியில் மெக்சிகோவை சேர்ந்த பாத்திமா போஸ் என்ற பெண் மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்றுள்ளார். இந்தியா சார்பாக மனிக்கா விஸ்வகர்மா பங்கேற்ற நிலையில், அவரால் முதல் 12 இடங்களில் இடம்பெறாமல் போனது குறிப்பிடத்தக்கது.

Related Stories
ஜோகன்னஸ்பர்க்கில் இந்திய வம்சாவளி தொழில்நுட்ப தொழில்முனைவோரை சந்தித்த பிரதமர் மோடி.. இந்திய மக்களுடன் நெருக்கமாகப் பணியாற்ற அழைப்பு..
துபாய் ஏர் ஷோ…. இந்திய தயாரிப்பான தேஜஸ் போர் விமானம் விபத்து – வெளியான அதிர்ச்சி தகவல்
மிஸ் யுனிவர்ஸ் 2025.. டாப் 12-ல் இடம்பெறாத இந்தியா.. கிரீடத்தை தட்டி தூக்கிய மெக்சிகோ அழகி!
டெல்லி கார் குண்டு வெடிப்பை நடத்தியதே நாங்கள் தான்.. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் பகீர் பேச்சு!
கடும் வார்த்தை போருக்கு பிறகு மம்தானியை சந்திக்கும் டொனால்ட் டிரம்ப்!
இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலை.. அச்சுற்றுத்தும் கரும்புகை.. பொதுமக்கள் அச்சம்!
மொபைல் போன் பயனாளர்களுக்கு மத்திய அரசின் கடும் எச்சரிக்கை!
நயன்தாராவின் பிறந்த நாளுக்கு ரூ.10 கோடி காரை பரிசளித்த விக்னேஷ் சிவன்
விஜய் தேவரகொண்டா பற்றி மறைமுகமாக பேசிய ரஷ்மிகா
கால்வாயில் சிக்கிக்கொண்ட குட்டி யானை - 3 நாட்கள் போராட்டத்துக்கு பிறகு பத்திரமாக மீட்பு