ஈரான் மீது தாக்குதல்.. போன் போட்டு பேசிய பிரதமர் மோடி.. பின்னணி என்ன?

Israel Iran Conflict : இஸ்ரேல் ஈரான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில், ஈரானின் தற்போதை நிலை குறித்து அதிபர் மசூத் பெஷேஸ்கியனிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியுள்ளார். ஈரானில் நடந்து வரும் போர் குறித்த ஆழ்ந்த வருத்தங்களையும் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார்.

ஈரான் மீது தாக்குதல்.. போன் போட்டு பேசிய பிரதமர் மோடி.. பின்னணி என்ன?

பிரதமர் மோடி

Updated On: 

22 Jun 2025 16:22 PM

 IST

டெல்லி, ஜூன் 22 : ஈரானின் தற்போதை நிலை குறித்து அதிபர் மசூத் பெஷேஸ்கியனிடம் பிரதமர் மோடி (PM Modi) தொலைபேசியில் பேசியுள்ளார். ஈரானில் நடந்து வரும் போர் குறித்த ஆழ்ந்த வருத்தங்களையும் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார். இஸ்ரேல் ஈரான் இடையே போர் பதற்றம் (Israel Iran Conflict) நிலவி வருகிறது. இதில் அமெரிக்கா (America) தற்போது உள்ளே நுழைந்துள்ளது. 2025 ஜூன் 22ஆம் தேதி ஈரானின் 3 அணுசக்தி மைய்ஙகள் மீது அமெரிக்கா தாக்குதலை நடத்தியது. இது மற்றொரு உலகப் போரை ஏற்படுத்துமா என்ற பதற்றத்தை அதிகரித்துள்ளது. அமெரிக்கா தாக்குதல் நடத்தியதை உலக நாடுகள் கவனித்து வருகின்றனர். ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபையும் கண்டம் தெரிவித்தது. இந்த சூழலில்,  ஈரான் அதிபர் மசூத் பெஷேஸ்கியனிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியுள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனுடன் பேசினோம். தற்போதைய நிலைமை குறித்து விரிவாக விவாதித்தோம். சமீபத்திய மோதல்கள் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்தோம். பிராந்திய அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை விரைவாக மீட்டெடுக்க வலியுறுத்தினோம். மேலும், பதற்றத்தைக் குறைக்கவும் வலியுறுத்தினோம்” என குறிப்பிட்டு இருந்தார்.

ஈரான் அதிபருடன் பேசிய பிரதமர் மோடி

இஸ்ரேல் ஈரான் போர் பதற்றம்

இஸ்ரேல் ஈரான் இடையே 10 நாட்களுக்கு மேலாக போர் பதற்றம் நீடித்து வருகிறது. ஈரான் நாட்டின் அணுசக்தி நிலையங்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதுல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக இஸ்ரேலின் டெல் அவீவ் நகரம் உள்ளிட்ட பகுதிகளில் ஈரான் ஏவுகணைகளை சரமாரியாக வீசித் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் இஸ்ரேலில் உள்ள மருத்துவமனைகள், வர்த்தக கட்டங்கள் தகர்க்கப்பட்டன.

இதையடுத்து, ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா கமேனி உயிருடன் இருக்க கூடாது என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியிருந்தார். இருநாடுகளும் சக்தி வாய்ந்த ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருவதால் மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் தணிவதற்கான சூழல் இல்லை. இதற்கிடையில், இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்காவும் ஈரானும் நேரடி போரில் கலந்து கொண்டுள்ளது.

முன்னதாக, போரை கைவிட்டு சரணடைய வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், நாங்கள் சரணடைய மாட்டோம் என ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து, 2025 ஜூன் 22ஆம் தேதியான இன்று மூன்று அணுசக்தி மையங்களை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.

இதில், பர்தவ், நடான்ஸ், எஸ்பஹான் ஆகிய 3 அணுசக்தி நிலையங்கள் முற்றிலுமாக தகர்க்கப்பட்டன. அமெரிக்காவின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதனால், மத்திய கிழக்கில் மேலும் பதற்றங்கள் அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகரித்து வரும் தங்க குத்தகை.. என்ன காரணம்?
மக்களை காக்கும் வவ்வால்கள் - கிராம மக்களின் விசித்திர நம்பிக்கை
உங்கள் அறையின் ஓரத்தில் நிற்பது பேயல்ல. அது ஸ்லீப் பேரலிசிஸ்!
ஏலியனுடன் தொடர்பில் இருந்த ஜார்ஜ் புஷ்? அமேசான் பிரைம் ஆவண படத்தால் சர்ச்சை