நிறைவுக்கு வந்த ஆக்ஸியம் 4 மிஷன்.. இன்று பிற்பகல் பூமிக்கு திரும்பும் சுபான்ஷூ சுகலா மற்றும் குழுவினர்..

Astronauts Return To Earth: ஆக்ஸியம் 4 திட்ட குழுவினர் ஜூலை 14 2025 தேதியான இன்று பூமிக்கு திரும்புகின்றனர். சர்வதேச விமான நிலையத்தின் கதவுகள் திறக்கப்பட்ட பின் இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா உடன் மூன்று வீரர்களும் ஸ்பேஸ் எக்சின் டிராகன் கேப்ஸ்யூல் உள்ளே நுழைவார்கள். பின்னர் 22 மணி நேரம் பயணம் மேற்கொண்டு நாளை அதாவது ஜூலை 15 2025 தேதி ஆன நாளை பிற்பகலில் பசிபிக் பெருங்கடலில் வந்து இறங்குவார்கள்

நிறைவுக்கு வந்த ஆக்ஸியம் 4 மிஷன்.. இன்று பிற்பகல் பூமிக்கு திரும்பும் சுபான்ஷூ சுகலா மற்றும் குழுவினர்..

கோப்பு புகைப்படம்

Published: 

14 Jul 2025 10:27 AM

சர்வதேச விண்வெளி நிலையம், ஜூலை 14, 2025: இந்தியா தரப்பில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றிருந்த இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா மற்றும் குழுவினர் பூமிக்கு திரும்ப ஆயத்தமாகி வருகின்றனர். 14 நாட்கள் ஆய்வுக்குப் பின்னர் இன்று அதாவது ஜூலை 14 2025 தேதியான இன்று பிற்பகல் 3 மணி அளவில் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டிராகன் கேப்சூல் மூலம் பூமிக்கு திரும்புகின்றனர். ஆக்சியம் 4 மிஷன் சரியாக ஜூன் 25 205 அன்று விண்ணில் செலுத்தப்பட்டது. ஃப்ளோரிடாவில் இருக்கக்கூடிய கென்னடி விண்வெளி ஆய்வு மையத்தின் ஸ்பேஸ் எக்ஸின் பால்கன் 9 ராக்கெட் மற்றும் டிராகன் விண்கலம் மூலம் 39a ஏவுதலத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.

சுபான்ஷூ சுக்லா தலைமையில் வீரர்கள் பயணம்:

நாசாவின் முன்னாள் விண்வெளி வீரர் பெக்கி விட்சன் இந்த திட்டத்திற்கு தலைமை தாங்கினார். அத்துடன் ஆக்ஸியம் 4 மிஷினில் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்தியாவின் விண்வெளி வீரரான சுபான்ஷூ சுக்லா விமானியாக பயணம் மேற்கொண்டார். அவரது தலைமையின் கீழ் திபோர் கபு மற்றும் ஸ்லோவோஸ் பயணித்தனர். 14 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆக்ஸியம் 4 மிஷினில் சுமார் 60 அறிவியல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அவற்றின் ஏழு பரிசோதனைகள் இந்திய ஆராய்ச்சியாளர்களால் முன்மொழியப்பட்டது.

இந்திய விமானப்படை விமானியான குரூப் கேப்டன் சுபான்ஷூ சுக்லா 1984 ஆம் ஆண்டுக்கு பிறகு விண்வெளிக்கு செல்லும் இரண்டாவது இந்தியராக உள்ளார். இதற்கு முன்னர் ராகேஷ் ஷர்மா 1984 ஆம் ஆண்டு விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

பூமிக்கு திரும்பும் ஆக்ஸியம் 4 குழுவினர்:


பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட ஆக்ஸியம் 4 திட்ட குழுவினர் ஜூலை 14 2025 தேதியான இன்று பூமிக்கு திரும்புகின்றனர். அதற்கான பணிகள் அனைத்தும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சர்வதேச விமான நிலையத்தின் கதவுகள் திறக்கப்பட்ட பின் இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா உடன் மூன்று வீரர்களும் ஸ்பேஸ் எக்சின் டிராகன் கேப்ஸ்யூல் உள்ளே நுழைவார்கள். பின்னர் 22 மணி நேரம் பயணம் மேற்கொண்டு நாளை அதாவது ஜூலை 15 2025 தேதி ஆன நாளை பிற்பகலில் பசிபிக் பெருங்கடலில் வந்து இறங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: ஜப்பானில் 1.02 பெட்டாபிட்ஸ் இணைய வேகம் கண்டுபிடிப்பு.. முழு நெட்ஃப்லிக்ஸ் நூலகத்தை ஒரே நொடியில் பதிவிறக்கம் செய்யலாம்..

உணவருந்தி மகிழ்ந்த வீரர்கள்:


விண்கலம் தரையிறங்கக்கூடிய பகுதியில் விண்வெளி வீரர்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பூமி திரும்புவதற்காக நான்கு வெண்வெளி வீரர்களும் தயாராகி வருகின்றனர். முன்னதாக ஜானி கிம் என்ற விண்வெளி வீரர் சக விண்வெளி வீரர்களுடன் பகிர்ந்து கொண்ட அனுபவத்தை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவில் விண்வெளி வீரர்கள் அனைவரும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குள் அமர்ந்து ஒன்றாக இரவு உணவு அருந்தும் புகைப்படங்கள் இடம் பெற்று இருந்தது.