உலகின் இரண்டாவது பணக்காரராக முன்னேறினார் லாரி பேஜ்.. லாரி எலிசனை முந்தினார்!
Larry Page Becomes 2nd Richest Billionaire | கூகுள் நிறுவனத்தின் பங்குகள் ஏற்பட்ட உயர்வு காரணமாக உலக பணக்காரர்கள் பட்டியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. அதன்படி கூகுள் நிறுவனத்தின் இணை நிறுவனர் லாரி பேஜ் உலகின் இரண்டாவது பணக்காரராக மாறியுள்ளார்.

லாரி பேஜ்
கூகுளின் (Google) தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் (Alphabet) பங்குகள் திடீரென உயர்ந்ததன் காரணமாக உலக பணக்காரர்கள் பட்டியலில் அதிரடி மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது கூகுள் நிறுவனத்தின் இணை நிறுவனரான லாரி பேஜ் (Larry Page), ஆரக்கிள் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி லாரி எலிசனை (Larry Elison) பின்னுக்கு தள்ளி உலகின் இரண்டாவது பணக்காரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். குறிப்பாக இவர் கூகுள் நிறுவனத்தின் இணை நிறுவனரான செர்ஜி பிரின் (Sergey Brin), அமேசானி ஜெஃப் பெசோஸ் (Jeff Bezos) ஆகியோரை பின்னுக்கு தள்ளி முன்னேறியுள்ளார். இந்த நிலையில், உலக பணக்காரர்கள் பட்டியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
உலக பணக்காரர்கள் பட்டியலில் ஏற்பட்ட அதிரடி மாற்றங்கள்
நவம்பர் 24, 2025 ஆல்பாபெட் நிறுவனத்தின் பங்குகளில் ஏற்பட்ட செல்வத்தின் எழுச்சியால் லாரி பேசிஜின் நிகர சொத்து மதிப்பு 8.7 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக அவரின் மொத்த சொத்து மதிப்பு 264.9 பில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.
லாரி பேஜ்
247.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்பு கொண்ட ஆரக்கிள் தலைவர் லாரி எலிசனை லாரி பேஜ் முந்தியுள்ளார். இதன் காரணமாக அவர் உலகின் இரண்டாவது பெரிய பணக்காரராக உயர்ந்துள்ளார்.
இதையும் படிங்க : புதுமண தம்பதிகள் கட்டாயம் எடுக்க வேண்டிய காப்பீட்டு திட்டங்கள்.. ஏன் அவசியம்?
செர்ஜி பிரின்
241.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்பு கொண்ட ஜெஃப் பெசோஸை முந்தி செர்ஜி பிரின் பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்துள்ளார். அவரது தற்போதைய சொத்து மதிப்பு 245.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது.
ஃபோர்ப்ஸ் பட்டியல் – உலகின் டாப் 5 பணக்காரர்கள்
ஃபோர்ப்ஸ் பட்டியலின் படி உலக பணக்காரர்கள் பட்டியலில் டாப் 5 இடம் பிடித்தவர்கள் இவர்கள் தான்.
முதல் இடம்
டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளார். அவரது நிகர சொத்து மதிப்பு 476.4 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது.
இரண்டாம் இடம்
கூகுள் நிறுவனத்தின் இணை நிறுவனரான லாரி பேஜ் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்துள்ளார். அவரது நிகர சொத்து மதிப்பு 264.9 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது.
இதையும் படிங்க : Micro Payments உங்களது சேமிப்பை எவ்வாறு பாதிக்கிறது?.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
மூன்றாவது இடம்
ஆரக்கிள் நிறுவனத்தின் தலைவர் லாரி எலிசன் பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்துள்ளார். அவரது நிகர சொத்து மதிப்பு 247.4 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது.
நான்காவது இடம்
கூகுள் நிறுவனத்தின் மற்றொரு இணை நிறுவனரான செர்ஜி பிரின் பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்துள்ளார். அவரது நிகர சொத்து மதிப்பு 245.6 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது.
ஐந்தாவது இடம்
அமேசான் நிறுவனத்தின் ஜெஃப் பெசோஸ் பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார். அவரது நிகர சொத்து மதிப்பு 241.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது.