பணி நேரம் முதல் சலுகைகள் வரை.. தொழிலாளர் சட்டத்தில் வந்த முக்கிய மாற்றங்கள்!
Central Govt New Labour Codes | மத்திய அரசு தொழிலாளர் விதியில் முக்கிய சில மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் ஊழியர்களின் பணி நேரம், சலுகைகளில் முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளது. அவை என்ன என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
மத்திய அரசு (Central Government) தொழிலாளர் சட்டத்தில் (Labour Law) சில முக்கிய திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. இதன் காரணமாக ஊழியர்களின் பணி நாட்கள், வார விடுமுறை, உடல்நல பாதுகாப்பு ஊதியம் ஆகியவற்றில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட உள்ளது. இந்த நிலையில், இந்த புதிய தொழிலார் சட்டங்கள் ஊழியர்களுக்கு எந்த எந்த வகையில் சிறப்பாக அமைந்துள்ளது, எந்த எந்த வகையில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இனி 120 நாட்களுக்கு பிறகே ஊதியத்துடன் கூடிய விடுமுறை
தற்போதைய விதிகளின் படி ஊழியர் ஊதியத்துடன் கூடிய விடுமுறை எடுக்க வேண்டும் என்றால் 240 நாட்கள் பணியாற்றி இருக்க வேண்டும். ஆனால், இந்த புதிய தொழிலாளர் சட்டம் அதில் முக்கிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. அதாவது, இந்த புதிய விதியின் படி 180 நாட்கள் பணி செய்யும் ஊழியர்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு எடுக்க தகுதியானவரகள் என்று கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : இனி தங்கத்தை போல வெள்ளியையும் அடகு வைத்து கடன் வாங்கலாம்.. ஆர்பிஐ அசத்தல் அறிவிப்பு!
வேலை நேரத்தில் ஏற்படக்கூடிய மாற்றம்
தற்போது பெரும்பாலான நிறுவனங்கள் ஒரு நாளுக்கு 8 மணி நேர வேலை, ஒரு வாரத்தில் 48 மணி நேர வேலை என்பதை கடைபிடித்து வருகின்றன. இந்த நிலையில், இந்த புதிய தொழிலாளர் சட்டத்தின் மூலம் மூன்று விதமான வேலை நேரங்கள் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
1. ஒரு நாளில் 12 மணி நேரம் வேலை – வாரத்தில் நான்கு நாட்கள் வேலை, மூன்று நாட்கள் விடுமுறை.
2. ஒரு நாளில் 9.5 மணி நேரம் வேலை – வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை, இரண்டு நாட்கள் விடுமுறை.
3. ஒரு நாளில் 8 மணி நேர வேலை – வாரத்தில் 6 நாட்கள் வேலை, ஒரு நாள் விடுமுறை.
இதையும் படிங்க : கிரெடிட் கார்டு EMI உண்மையிலே பயனுள்ளதா?.. அதில் மறைந்திருக்கும் சிக்கல்கள் என்ன என்ன?
இந்த வேலை நேர மாற்றம் அமலுக்கு வந்தாலும், ஊழியர்கள் கூடுதல் நேரம் பணியாற்ற வேண்டிய தேவையும் இருக்கும். அவ்வாறு அவர்கள் கூடுதலாக வேலை செய்யும்போது சாதாரன நேரத்தில் வழங்கப்படும் ஊழியத்தை விட இரண்டு மடங்கு அதிகம் கொடுக்க வேண்டும் என்று புதிய விதிகள் கூறுகின்றன.
இலவச உடல்நல பரிசோதனை
40 வயதுக்கு மேல் உள்ள அனைத்து ஊழியர்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் கட்டாய இலவச மருத்துவ பரிசோதனை வழங்கப்பட வேண்டும் என்றும் இந்த விதிகள் கூறுவது குறிப்பிடத்தக்கது.