எப்ஸ்டீன் ஃபைல்ஸ் – அமெரிக்க முன்னாள் அதிபர்கள் பில் கிளின்டன் – ஜார்ஜ் புஷ் மீது பரபரப்பு குற்றச்சாட்டு
அமெரிக்க முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் மற்றும் ஜார்ஜ் புஷ் ஆகியோர் ஒரு சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு இமெயில் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கடந்த ஆகஸ்ட் 27, 2019 அன்று அளித்த நேர்காணலில் அந்தச் சிறுவன் சில அதிர்ச்சியளிக்கும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தான்.

ஜார்ஜ் புஷ்
ஜெஃப்ரி எப்ஸ்டீன் வழக்குடன் தொடர்புடையதாக கூறப்படும் எப்ஸ்டீன் ஃபைல்ஸ் எனப்படும் ஆவணங்கள் கடந்த ஜனவரி 30, 2026 அன்று வெள்ளிக்கிழமை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக சமூக வலைதளங்களிலும் சில இணைய தளங்களிலும் பல்வேறு உறுதிப்படுத்தப்படாத குற்றச்சாட்டுகள் பரவி வருகின்றன. இதில் முன்னாள் அமெரிக்க அதிபர்கள் உள்ளிட்ட சில பிரபல நபர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டதாக கூறப்பட்டாலும், அவை எந்தவொரு நீதிமன்றத் தீர்ப்பினாலும் அல்லது உறுதியான ஆதாரங்களாலும் உறுதிப்படுத்தப்படவில்லை.
அமெரிக்க அதிபர்கள் மீது பரபரப்பு குற்றச்சாட்டு
வெளியிடப்பட்டதாக கூறப்படும் ஆவணங்களில் இடம்பெற்ற தகவல்கள், கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 அன்று ஒரு நபர் வழங்கியதாக கூறப்படும் வாக்குமூலங்களை மேற்கோள் காட்டுகின்றன. அந்த நபர், கடந்த கால அனுபவங்களை அவர் பகிர்ந்ததாக கூறப்பட்டாலும், அவர் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும், அவை பின்னர் காவல்துறையின் விசாரணைகளால் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக அதில் அமெரிக்க முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் மற்றும் ஜார்ஜ் புஷ் ஆகியோர் ஒரு சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு இமெயில் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கடந்த ஆகஸ்ட் 27, 2019 அன்று அளித்த நேர்காணலில் அந்தச் சிறுவன் சில அதிர்ச்சியளிக்கும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தான். கடந்த 2000 ஆம் ஆண்டில் தான் ஒரு படகில் இருந்தபோது, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அந்தப் பயணத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் உடனிருந்தார்.
எப்ஸ்டீன் மற்றும் கிளிண்டனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டபோது, தான் போதைப்பொருள் பழக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததாகத் தெரிவிக்கிறார் மேலும் மாயத்தோற்றத்தை ஏற்படுத்தும் காளான்கள் மற்றும் பிற சட்டவிரோதப் பொருட்களை உட்கொண்டதாகவும், 5 வயது முதல் 22 வயது வரை தனது பெரிய மாமாவால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார். தனது உறவினர்கள் உறுப்பினர்களாக இருந்த ஒரு படகு சங்கத்தில் எப்ஸ்டீனைச் சந்தித்ததாக விவரித்தார், முதலில் 5 வயதிலும் பின்னர் 8 வயதிலும் சந்தித்ததாக நேர்காணலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர் எந்த ஆதரவான அல்லது உறுதிப்படுத்தும் ஆதாரத்தையும் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. தான் போதைப்பொருள் பழக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் தொடர்பான பதிவுகளில், அந்த நபரின் வாக்குமூலம் குறித்து விசாரணை நடைபெற்றதாக கூறப்பட்டாலும், அதற்கான ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் விசாரணை விரிவுபடுத்தப்படவில்லை என்று சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மேலும், அந்த நபரின் மனநிலை தொடர்பாக அதிகாரிகள் குறிப்பிட்டதாகவும், அதனால் குற்றச்சாட்டுகள் சட்டரீதியாக முன்னேற்றம் பெறவில்லை என்றும் கூறப்படுகிறது.