Starlink : விரைவில் இந்தியாவுக்கு வரும் ஸ்டார்லிங்க்.. ஒரு மாத சேவை இலவசம்?.. வெளியான முக்கிய தகவல்!

Elon Musk's Starlink Coming to India | எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் உலகம் முழுவதும் அதன் சேவையை வழங்கி வருகிறது. அதன்படி, இந்தியாவிலும் ஸ்டார்லிங்க் சேவையை வழங்க திட்டமிட்டு எலான் மஸ்க், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், ஸ்டார்லிங்க் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Starlink : விரைவில் இந்தியாவுக்கு வரும் ஸ்டார்லிங்க்.. ஒரு மாத சேவை இலவசம்?.. வெளியான முக்கிய தகவல்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

10 Jun 2025 08:40 AM

அமெரிக்கா, ஜூன் 10 : உலக பணக்காரரான எலான் மஸ்க் (Elon Musk), தனது ஸ்டார்லிங் (Starlink) இணைய சேவையை இந்தியாவுக்கு விரிவுப்படுத்துவதற்கான முயற்சியில் உள்ளார். இந்த நிலையில், திட்டமிட்டபடியே இன்னும் ஒருசில மாதங்களில் இந்தியாவுக்கு ஸ்டார்லிங் சேவை வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, இந்தியாவில் ஸ்டார்லிங் சேவையை பெரும் வாடிக்கையாளர்களுக்கு, ஒரு மாதம் இலவச சேவை வழங்க அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்டார்லிங் நிறுவனத்தின் இந்த திட்டம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

உலக அளவில் இணைய சேவையை வழங்கி வரும் எலான் மஸ்கின் ஸ்டார் லிங்க்

உலக பணக்காரர் எலான் மஸ்க், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட மிகப்பெரிய நிறுவனங்களை நடத்தி வருகிறார். அந்த வகையில் எலான் மஸ்க் நடத்தி வரும் இணைய சேவை நிறுவனம்தான் ஸ்டார்லிங். எலான் மாஸ்டர் தனது ஸ்டார்லிங் நிறுவனத்தின் மூலம் உலக அளவில் இணைசேவை வழங்கி வருகிறார். இந்த ஸ்டார்லிங்க் நேரடியாக செயற்கைக்கோளிலிருந்து இணைய சேவையை வழங்குவதால் நகரங்கள் மட்டுமின்றி கிராமங்களிலும், மலைப்பகுதிகளிலும் இணைய சேவை சீராக கிடைக்கும்.

இதன் காரணமாக, பலரும் ஸ்டார்லிங் நிறுவனத்தின் இணைய வசதியை பயன்படுத்தி வருகின்றனர். ஸ்டார்லிங்க் சேவை உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பயன்படுத்தப்படும் நிலையில், அதனை இந்தியாவிலும் அறிமுகப்படுத்துவதற்கான பணிகளை எலான் மஸ்க் மேற்கொண்டுள்ளார்.

ரூ.3,000 மாத கட்டணம் செலுத்தினால் அன்லிமிடெட் இணைய சேவை

ஸ்டார்லிங்க் நிறுவனம் இந்தியாவில் செயற்கைக்கோள் இணைய சேவைகளை வழங்குவதற்காக தொலைத்தொடர்புத்துறை இடம் இருந்து கடந்த வாரம் குளோபல் மொபைல் பர்சனல் கம்யூனிகேஷன் பை சாட்டிலைட் (GMPCS – Global Mobile Personal Communication By Satellite) உரிமத்தை பெற்றுள்ளது. இந்த நிலையில் இன்னும் ஒரு சில மாதங்களில் இந்தியாவில் தனது சேவையை டார்லிங் தொடங்க உள்ளதாக அதன் தலைவர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார். எனவே ஸ்டார்லிங் சேவையை பெற விரும்பும் இந்திய பொதுமக்கள், டார்லிங் கருவியை ரூ. 33,000-க்கு வாங்கி பின்னர் மாதம் ரூ.3,000 செலுத்தி அன்லிமிடெட் இணைய சேவையை பெற்றுக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

இன்னும் ஒருசில மாதங்களில் சேவையை தொடங்கும் ஸ்டார்லிங்க்

இந்தியாவில் ஒரு மாதம் இலவச இணைய சேவையை வழங்க ஸ்டார்லிங்க் திட்டம்

இந்த நிலையில், இந்தியாவில் ஸ்டார்லிங்க் இணைய சேவையை பெறும் பயனர்களுக்கு ஒரு மாதம் இலவச சேவை வழங்க அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது.