அறுவை சிகிச்சையின்போது நர்ஸ் உடன் உடலுறவு வைத்த மருத்துவர்.. நோயாளியை தவிக்க விட்ட கொடூரம்!

Doctor Abandoned Patient | லண்டனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பாகிஸ்தானை சேர்ந்த மருத்துவர் ஒருவர் பணியாற்றி வந்த நிலையில், மயக்க மருத்து கொடுத்து சிகிச்சைக்கு தயாராக இருந்த நோயாளியை பாதியிலேயே விட்டுவிட்டு செவிலியருடன் உடலுறவில் ஈடுபட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அறுவை சிகிச்சையின்போது நர்ஸ் உடன் உடலுறவு வைத்த மருத்துவர்.. நோயாளியை தவிக்க விட்ட கொடூரம்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

13 Sep 2025 09:06 AM

 IST

லண்டன், செப்டம்பர் : பாகிஸ்தானை (Pakistan) சேர்ந்த மருத்துவர் ஒருவர் தான் லண்டனில் பணியாற்றும்போது (London) அறுவை சிகிச்சைக்காக மயக்கமருந்து கொடுக்கப்பட்ட நோயாளியை, அறுவை சிகிச்சையின் போது பாதியிலே விட்டுவிட்டுச் செவிலியர் உடன் உடலுறவில் ஈடுபட்ட சம்பவம் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அறுவை சிகிச்சை நடக்கும் அறைக்கு மற்றொரு செவிலியர் சென்று பார்த்தபோது அவர்கள் இருவரையும் அவர் கையும் களவுமாக பிடித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

அறுவை சிகிச்சை – நோயாளியை பாதியிலேயே விட்டுவிட்டுச் சென்ற மருத்துவர்

பாகிஸ்தானை சேர்ந்தவர் மயக்க மருந்து நிபுணரான மருத்துவர் சுஹைல் அஞ்சும். இவர் லண்டனில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ளார். அப்போது பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சைக்காக நோயாளி ஒருவருக்கு மயக்க மருந்து கொடுத்துள்ளார். இந்த நிலையில், நோயாளியை அறுவை சிகிச்சையின் போது பாதியிலேயே விட்டுவிட்டுச் சென்ற அவர், கழிவறைக்கு செல்வதாக மயக்க மருந்து செவிலியரிடம் கூறிவிட்டு வேறு செவிலியருடன் உடலுறவில் ஈடுபட்டுள்ளார்.

இதையும் படிங்க : காளான் கொலையாளிக்கு சாகும் வரை ஜெயில்.. அடுத்தடுத்து 3 கொலை.. அதிர வைக்கும் பின்னணி!

கையும், களவுமாக  சிக்கிய மருத்துவர் மற்றும் செவிலியர்

மருத்துவர் செவிலியர் உடன் அறுவை சிகிச்சை நடைபெறும் அறைக்கு அருகே உள்ள அறையில் உடலுறவில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த நிலையில், அந்த அறைக்கு மருந்து பொருட்களை எடுக்கச் சென்ற வேறு ஒரு செவிலியர் அதனை பார்த்து கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார். உடனடியாக அவர் அது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் அந்த மருத்துவர் மீது விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் மருத்துவர் மிகுந்த மன வேதனையுடன் பேசியுள்ளார்.

இதையும் படிங்க : மீண்டும் ஒருமுறை என் மீது மோது பேபி பாடலை பாடிக்கொண்டு கார் ஓட்டிய பெண்.. விபத்தில் சிக்கிய பகீர் காட்சி வைரல்!

விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்ட மருத்துவர்

விசாரணையில் மருத்துவர் தான் செய்த தவறை ஒப்புக்கொண்டுள்ளார். அதாவது, தனது மனைவியுடன் சரியான உடல் உறவில் இல்லாத காலக்கட்டத்தில் தான் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அப்போது இத்தகைய சம்பவம் நடைபெற்றதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த விஷயம் எவ்வளவு அவமானகரமானது என்பதை தன்னால் வெளிப்படுத்தவே முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், தான் உண்மையிலே வருந்துவதாகவும், வெட்கப்படுவதாகவும், தனது நடத்தையின் தீவிரத்தை முழுமையாக உணர்வதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த சம்பவத்திற்கு பிறகு அந்த மருத்துவர் பாகிஸ்தானுக்கே சென்றுவிட்ட நிலையில், அங்குள்ள மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.