ஒலிம்பிக் கிராமத்தில் ஆணுறைக்கு தட்டுப்பாடு.. மூன்று நாட்களில் 10,000 ஆணுறைகள் தீர்ந்தது!

Condom Shortage In Olympic Village In Italy | குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்காக 3,000 விளையாட்டு வீரர்களுக்கு 10,000 ஆணுறைகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில், மொத்த ஆணுறைகளும் வெறும் 3 நட்களில் தீர்ந்துவிட்டதால் அங்கு ஆணுறைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

ஒலிம்பிக் கிராமத்தில் ஆணுறைக்கு தட்டுப்பாடு.. மூன்று நாட்களில் 10,000 ஆணுறைகள் தீர்ந்தது!

மாதிரி புகைப்படம்

Updated On: 

16 Feb 2026 23:31 PM

 IST

மிலான், பிப்ரவரி 16 : இத்தாலியின் (Italy) மிலான் மற்றும் கோர்டினா நகரங்களில் 2026 ஆம் ஆண்டுக்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அங்கு ஏராளமான விளையாட்டு வீரர்கள் குவிந்துள்ள நிலையில், தற்போது அங்கு ஆணுறைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வழக்கமாக உணவு, தண்ணீர் தட்டுப்பாடுகள் ஏற்படும் நிலையில், தற்போது ஆணுறைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது ஆச்சர்யத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்காக குவிந்த விளையாட்டு வீரர்கள்

ஒலிம்பிக் வீரர்கள் தங்கியுள்ள கிராமத்தில் அவர்களுக்கு தேவையான உயர்தர அறைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. அதில், ஆணுறைகளும் அடங்கும். ஒலிம்பிக் போட்டியில் இருந்து பங்கேற்பதற்காக அங்கு சுமார் 3,000 விளையாட்டு வீர்ரகள் குவிந்துள்ளனர். அவர்களுக்காக சுமார் 10,000 ஆணுறைகள் வழங்கப்பட இருந்துள்ளது. இந்த நிலையில், வெறும் மூன்றே நாட்களில் விளையாட்டு வீரர்களுக்காக வைக்கப்பட்டு இருந்த அனைத்து ஆணுறைகளும் தீர்ந்துள்ளது.

இதையும் படிங்க : பிரதமர் மோடி குறித்து அதிபர் டிரம்ப் பேசிய வீடியோ.. உண்மை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் – வெளியுறவு அமைச்சக பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால்..

கூடுதல் வினியோகத்திற்கு ஏற்பாடு செய்யப்படும் – மார்க் ஆடம்ஸ்

இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களை சந்தித்த ஒலிம்பிக் கமிட்டி செய்தி தொடர்பாளர் மார்க் ஆடம்ஸ், ஒலிம்பிக் கிராமத்தில் ஒலிம்பிக் சாசனத்தின் விதி 62-ன் படி, கண்டிப்பாக ஆணுறை வழங்கப்பட வேண்டும். எதிர்பார்ப்பதை விட தேவை அதிகமாக உள்ளதால் கூடுதல் வினியோகத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒலிம்பிக் முடியும் வரை தட்டுப்பாடு வராமல் தொடர்ந்து இருப்பு வைக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : வங்கதேச தேசியவாத கட்சி அபார வெற்றி.. தாரிக் ரஹ்மானுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி

வழக்கமாக ஒலிம்பிக் கிராமங்களில் உணவு, தண்ணீர் தட்டுப்பாடுகள் ஏற்படும் நிலையில், இந்த முறை ஆணுறை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories
அணுசக்தி விவகாரத்தில் சமரசத்திற்கு தயார்.. ஆனால்.. அமெரிக்காவுக்கு நிபந்தனை வைத்த ஈரான்!
அமெரிக்காவில் படித்து வந்த இந்திய இளைஞர் திடீர் மாயம்.. அதிர்ச்சி சம்பவம்!
ஏஐ சாட்பாட்களை டின்னர் டேட்டுக்கு அழைத்து வாருங்கள்.. நியூயார்க் உணவகம் அறிவிப்பு!
கிம் ஜாங் உன்னை தொடர்ந்து வடகொரியாவை ஆளப்போகும் அவரது மகள்?.. உலக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய தகவல்!
பிரதமர் மோடி குறித்து அதிபர் டிரம்ப் பேசிய வீடியோ.. உண்மை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் – வெளியுறவு அமைச்சக பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால்..
வங்கதேச தேசியவாத கட்சி அபார வெற்றி.. தாரிக் ரஹ்மானுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி
ஆஸ்திரேலியாவில் பாகிஸ்தான் ஹாக்கி அணிக்கு நேர்ந்த அவமானம்
திருமணத்துக்கு பிறகு சகோதரியின் காருக்கு பின்னால் 70 கி.மீ சைக்கிளில் சென்ற சகோதரன் - வைரலாகும் வீடியோ
பீகாரில் ரோஸ் டே கொண்டாடிய பெண்ணுக்கு எதிராக வழக்கு
ராம் சரணின் இரட்டை குழந்தைகளின் பெயர் என்ன தெரியுமா?