விண்வெளிக்கு அனுப்பப்படும் 6 வகை நுண்ணுயிரிகள்.. சிலி நாட்டு விஞ்ஞானிகள் சோதனை!

6 Types Microbes From Earth To Space | விண்வெளி தொடர்பான தொடர் ஆய்வுகளை உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், பூமியில் இருந்து 6 வகையான நுண்ணுயிரிகளை விண்வெளிக்கு அனுப்ப சிலி நாட்டு விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர்.

விண்வெளிக்கு அனுப்பப்படும் 6 வகை நுண்ணுயிரிகள்.. சிலி நாட்டு விஞ்ஞானிகள் சோதனை!

கோப்பு புகைப்படம்

Updated On: 

23 Apr 2026 07:02 AM

 IST

சாண்டியாகோ, ஏப்ரல் 23 : விண்வெளியில் உள்ள கடுமையான சூழ்நிலைகளில் உயிரினங்கள் வாழ முடியுமா என்பதை சோதிக்க சிலி (Chile) நாட்டு விஞ்ஞானிகள் புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளனர். விண்வெளியில் உயிர்கள் வாழ தகுதி உள்ளதா என்பதை தொடர்ந்து சோதனை செய்து வரும் அவர்கள் நுண்ணுயிரிகளை விண்வெளிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில், சிலி நாட்டு விஞ்ஞானிகளின் இந்த புதிய ஆய்வு முயற்சி குறித்து விரிவாக பார்க்கலாம்.

விண்வெளிக்கு நுண்ணயிரிகளை அனுப்ப திட்டமிட்டுள்ள சிலி விஞ்ஞானிகள்

விண்வெளி உயிர்கள் வாழ்வதற்கான தகுதி உள்ளதா என்பதை சோதனை செய்ய, அண்டார்டிகா கண்டம் மற்றும் சிலி நாட்டின் அடகாமா பாலைவனத்தில் வசிக்கும் 6 வகையான நுண்ணுயிரிகளை விண்வெளிக்கு அனுப்ப ஆய்வாளர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்த விண்வெளி ஆய்வுக்கு போலாரிஸ் (Polaris) என பெயரிடப்பட்டுள்ளது. ஜெனி பிலெய்மி என்ற விஞ்ஞானியின் தலைமையில் இந்த ஆய்வு நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க : போர் நிறுத்த உடன்பாடுகளை மீறினால் பதிலடி.. இஸ்ரேலை எச்சரித்த ஹிஸ்புல்லா அமைப்பு!

சர்வதேச விண்வெளி நிலையத்து வெளியே நடத்தப்பட உள்ள சோதனை

இந்த திட்டத்தின் படி, பூமியில் இருந்து விண்வெளிக்கு அனுப்பப்படும் இந்த நுண்ணுயிரிகள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெளியே வைத்து சோதனை மேற்கொள்ளப்பட உள்ளன. அங்குள்ள சூழல்களை இந்த நுண்ணுயிரிகள் எப்படி எதிர்க்கொள்கின்றன என்பதை அவர்கள் சோதனை உள்ளன. குறிப்பாக விண்வெளி நிலையத்தில் உள்ள பிராண வாயு, புவியீர்ப்பு விசை இல்லாத சூழல், அதிக கதிர்வீச்சு மற்றும் வெப்பநிலையை இந்த நுண்ணயிரிகள் எப்படி எதிர்கொள்கின்றன என்பதை மையப்படுத்தியதாக இந்த சோதனை அமைய உள்ளது.

இதையும் படிங்க : ஈரான் நடத்திய தாக்குதல்.. 2 இந்தியக் கப்பல்கள் சேதம்..

இந்த நுண்ணுயிரிகளை விண்வெளிக்கு அனுப்பி ஆய்வு செய்யும் திட்டம் தொடர்பாக உலக பணக்காரர் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் (Space X) நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் (Falcon 9 Rocket) பயன்படுத்தப்பட உள்ளது.

Follow Us
எங்கள் விமானம் தாக்கப்படும் அபாயம் - பாகிஸ்தான் சென்ற ஈரான் குழுவினர் அச்சம்
போரைப் போல மோதிக்கொள்ளும் சிம்பான்சிகள் - காரணம் என்ன?
UPI-ல் ரூ.10,000-க்கு மேல் பணம் அனுப்ப ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டுமா?.. ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
சீனா தயாரித்த செயற்கைக்கோள் மூலம் கண்காணிப்பு? எழுந்த புதிய பாதுகாப்பு கவலை..