Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Donald Trump : அமெரிக்காவில் நுழைய 12 நாடுகளுக்கு தடை விதித்த டிரம்ப்.. காரணம் என்ன?

Donald Trump's Travel Ban on 12 Countries | அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று (ஜூன் 04, 2025) முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் அமெரிக்காவில் நுழைய 12 நாடுகளுக்கு முழு தடையும், 7 நாடுகளுக்கு பகுதி தடையும் விதித்து உத்தரவிட்டார். இந்த நிலையில், அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள நாடுகள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Donald Trump : அமெரிக்காவில் நுழைய 12 நாடுகளுக்கு தடை விதித்த டிரம்ப்.. காரணம் என்ன?
டொனால்ட் டிரம்ப்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 05 Jun 2025 09:01 AM

அமெரிக்கா, ஜூன் 05 : ஆப்கானிஸ்தான் (Afghanistan) உள்ளிட்ட 12 நாடுகளுக்கு அமெரிக்காவில் நுழைய முழு தடை விதித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (America President Donald Trump) உத்தரவிட்டுள்ளார். இந்த பட்டியலில் இந்தியாவின் அண்டை நாடான ஆப்கானிஸ்தான் உள்ள நிலையில், பர்மா (Burma), ஈரான் (Iran), லிபியா (Libya) உள்ளிட்ட நாடுகளும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இதுமட்டுமன்றி, 7 நாடுகளுக்கு பகுதி தடையையும் அவர் விதித்துள்ளார். இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தடை விதித்துள்ள நாடுகள் எவை, எதற்காக இந்த தடையை அவர் அறிவித்துள்ளார் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

12 நாடுகளுக்கு அமெரிக்காவில் நுழைய முழு தடை விதித்த டிரம்ப்

அமெரிக்கா அதிபராக பொறுப்பேற்றது முதலே டொலால்ட் டிரம்ப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அமெரிக்கர்கள் அல்லாதவர்களை நாடு கடத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று (ஜூன் 04, 2025) முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அமெரிக்காவில் நுழைய 12 நாடுகளுக்கு முழு தடை விதித்துள்ளார். அதேபோல 7 நாடுகளுக்கு பகுதி தடையும் விதித்து அவர் உத்தரவிட்டுள்ளார்.

நாடுகளுக்கு தடை விதித்து உத்தரவிட்ட டிரம்ப் – காரணம் என்ன?

முழு தடை விதிக்கப்பட்டுள்ள நாடுகள்

  • ஆப்கானிஸ்தான்
  • மியான்மர்
  • சாட்
  • காங்கோ
  • ஈக்வடோரியல் குனியா
  • எரித்திரியா
  • ஹைதி
  • ஈரான்
  • லிபியா
  • சோமாலியா
  • சூடான்
  • ஏமன்

பகுதி தடை விதிக்கப்பட்டுள்ள நாடுகள்

  • புருண்டி
  • கியூபா
  • லாவோஸ்
  • செய்ரா லியோன்
  • டோகோ
  • துர்க்மெனிஸ்தான்
  • வெனிசுலா

மேற்குறிப்பிட்ட இந்த பட்டியலின்படி, 12 நாடுகளுக்கு முழு தடையும், 7 நாடுகளுக்கு பகுதி தடையும் விதித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.