ஈரான் உடன் வணிகம் செய்யும் நாடுகளுக்கு 25% வரி.. இந்தியா மீதான வரி 75% ஆக உயருகிறது?
America Imposed 25% Tariff On Iran Trade Partners | ஈரானில் வெடித்துள்ள உள்நாட்டு போராட்டத்தில் தலையிடுவதன் காரணமாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே மோதல் உருவாகியுள்ளது. இந்த நிலையில், ஈரான் உடன் வர்த்தகம் செய்யும் உலக நாடுக்ளுக்கு அமெரிக்கா 25 சதவீதம் வரி விதித்துள்ளது.

ஈரான் உட்சபட்ச தலைவர் அலி கமேனி, அமெரிக்க் அதிபர் டொனால்ட் டிரம்ப்
வாஷிங்டன், ஜனவரி 13 : ஈரானில் (Iran) பணவீக்கம், விலைவாசி உயர்வு ஆகியவற்றை எதிர்த்து மக்கள் போராடி வருகின்றனர். இந்த போரட்டம் நாளடைவில் மிக தீவிரமாக மாறி அரசையே வெளியேற்றும் அளவுக்கு மக்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இவ்வாறு ஈரான் மக்கள் போராடி வந்தது உள்நாட்டு விவகாரமாக இருந்து வந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் (America President Donald Trump) தலையிடலால் அது தற்போது உலக பிரச்னையாக மாறியுள்ளது. குறிப்பாக புவிசார் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், மேலும் அதிர்ச்சியூட்டும் வகையில் டிரம்ப் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப்
ஈரான் மக்கள் அரசுக்கு எதிரான மிக தீவிரமான போராட்டத்தை கையில் எடுத்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், ஈரான் மக்களுக்கு விடுதலை பெற்றுத் தர அமெரிக்கா தயாராக உள்ளது என கூறியுள்ள டிரம்ப், போராட்டக்காரர்களை ஒடுக்கினால் ஈரான் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் கூறியுள்ளார். இதன் காரணமாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நீடித்து வந்த மோதல் தற்போது மேலும் வலுவடைந்துள்ளது.
இதையும் படிங்க : வெனிசுலாவின் காபந்து அதிபர் நான் தான்.. டிரம்ப் பகிர்ந்த புகைப்படத்தால் பரபரப்பு!
ஈரான் உடன் வணிகம் செய்யும் நாடுகளுக்கு 25% வரி – டிரம்ப்
ஈரானில் போராடி வரும் போராட்டக்கார்ரகளை கடவுளுக்கு எதிரானவர்கள் என்று ஈரான் அறிவித்துள்ளது. மேலும், ஈரானில் நடக்கும் இந்த போராட்டங்களுக்கு அமெரிக்கா தான் காரணம் என்றும் ஈரான் குற்றம்சாட்டியுள்ளது. இதன் காரணமாக அமெரிக்கர்கள் ஈரானில் இருந்து வெள்யேறுமாறு அமெரிக்கா அறிவித்துள்ளது. இதற்கிடியே ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டமிட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.
இதையும் படிங்க : “அவ்வளவு திறமையானவராக இருந்தால்”.. டிரம்புக்குக்கு நேரடி சவால் விட்ட ஈரான் தலைமை மதகுரு!
இத்தகைய பரபரப்பான சூழலுக்கு மத்தியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பரபரப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, ஈரான் உடன் வணிகம் செய்யும் உலக நாடுகளுக்கு 25 சதவீதம் வரி விதிக்க உள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார். மேலும் இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அவர் அறிவித்துள்ளார். ஈரான் உடன் வணிகம் செய்யும் உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இதன் காரணமாக ஏற்கனவே அமெரிக்கா இந்தியா மீது அமலில் வைத்துள்ள 50 சதவீத வரியுடன் சேர்த்து மொத்தமாக 75 சதவீதம் வரி விதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.