ஈரான் இஸ்ரேல் மோதலில் அவசரப்பட்ட அமெரிக்கா – கவிஞர் வைரமுத்து பதிவு..

Vairamuthu: ஈரான் நாடு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து மதிய கிழக்கில் இருக்கும் பதற்றத்தை தணிக்க வல்லரசு நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஈரான் இஸ்ரேல் மோதலில் அவசரப்பட்ட அமெரிக்கா - கவிஞர் வைரமுத்து பதிவு..

கோப்பு புகைப்படம்

Published: 

23 Jun 2025 11:20 AM

 IST

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இருக்கக்கூடிய மோதல் (Iran Israel Conflict) நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஈரானில் இருக்கக்கூடிய அணு ஆயுத உலைகள் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இந்த தாக்குதலுக்கு ஈரானும் பதிலடி கொடுக்கும் வகையில் ஏவுகணை மூலம் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இந்த இருநாட்டுக்கும் இடையே இருக்கக்கூடிய போர் பதற்றம் காரணமாக மத்திய கிழக்கில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஈரான் நாடு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து மதிய கிழக்கில் இருக்கும் பதற்றத்தை தணிக்க வல்லரசு நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதேபோல் ஈரானின் அணுசக்தி தளங்களில் டொமாஹக் ஏவுகணை வீசி அமெரிக்கா அவசரப்பட்டு விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் இஸ்ரேல் மோதலில் அமெரிக்கா:

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வந்த மோதலில் அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவாக களமிறங்கியது. அதாவது இஸ்ரேல் நாட்டிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. இது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு உலக நாடுகள் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா ஈரான் மீது நடத்திய தாக்குதலுக்கு ஈரான் கடுமையான கண்டனங்கள் தெரிவித்து தகுந்த பதிலடி கொடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாக்குதல் தொடர்ந்தால் இன்னும் பேரழிவு தரும் தாக்குதல்கள் நடத்தப்படும் என்று அதிபர் மசூத் பெஷேஷ்கியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வல்லரசுகள் நல்லரசுகள் ஆகாவிடில் புல்லரசு ஆகிவிடும் பூமி – வைரமுத்து:


இது போன்ற சூழலில் கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் என தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பான அவரது பதிவில், “ உலகின் தலையில் மெல்லிய இழையில் ஆடிக்கொண்டிருக்கிறது அணுகுண்டு. “வக்கிர மனங்களால் உக்கிரமாகுமோ யுத்தம்” கலங்குகிறது உலகு ஈரானின் அணுசக்தித் தளங்களில் டொமாஹக் ஏவுகணைகள்வீசி அவசரப்பட்டுவிட்டது அமெரிக்கா

வல்லரசுகள் நல்லரசுகள் ஆகாவிடில் புல்லரசு ஆகிவிடும் பூமி. தான் கட்டமைத்த நாகரிகத்தைத், தானே அழிப்பதன்றி இதுவரை போர்கள் என்ன செய்தன? போரிடும் உலகத்தை, வேரொடு சாய்ப்போம் அணுகுண்டு முட்டையிடும் அலுமினியப் பறவைகள் அதனதன் கூடுகளுக்குத் திரும்பட்டும்” என குறிப்பிட்டுள்ளார்.