பாகிஸ்தான் உடன் மோதல் வெடித்தால் இந்தியாவுக்கு ஆதரவு அளிக்க அமெரிக்கா மறுப்பு!

America Conveys No Support To India | இந்தியா உடன் நட்பு உறவில் இருக்கும் அமெரிக்கா, பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையே மோதல் வெடித்தால் வாஷிங்டன் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவிக்காது என்று அமெரிக்கா கூறியுள்ளதாக சண்டே கார்டியன் அறிக்கை கூறுகிறது.

பாகிஸ்தான் உடன் மோதல் வெடித்தால் இந்தியாவுக்கு ஆதரவு அளிக்க அமெரிக்கா மறுப்பு!

மாதிரி புகைப்படம்

Updated On: 

30 Mar 2026 21:38 PM

 IST

வாஷிங்டன், மார்ச் 30 : புதுடெல்லி (New Delhi) வளர்ச்சிக்கான கூட்டாளியாக இருந்தாலும், பாகிஸ்தான் (Pakistan) மற்றும் இந்தியா (India) இடையே மோதல் வெடித்தால் வாஷிங்டன் (Washington) நிபந்தனை அற்ற ஆதரவை வழங்காது என்று அமெரிக்கா (America), இந்தியாவிடம் கூறியுள்ளதாக சண்டே கார்டியன் (Sunday Guardian) அறிக்கை கூறுகிறது. இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே சுமூகமான உறவு நீடித்து வரும் நிலையில், அமெரிக்கா இதனை கூறியுள்ளது. இந்த நிலையில், அமெரிக்கா தான் வெளிப்படுத்தியுள்ள இந்த நிலைப்பாடு குறித்து விரிவாக பார்க்கலாம்.

அமெரிக்கா, இந்தியாவுக்கு நல்ல கூட்டாளியாக இருக்காது – விமர்சகர்கள்

அமெரிக்காவின் இந்த நிலைப்பாடு பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், ராணுவ மோதல்களின் போது அமெரிக்கா, இந்தியாவுக்கான நம்பகமான கூட்டாளியாக இருக்காது என்பது மீண்டும் ஒருமுறை உறுதி செய்யப்பட்டுள்ளதாக விமர்சகர்கள் தங்களது கருத்துக்களை முன்வைத்துள்ளனர். ஆபரேஷன் சிந்தூரின் போது கூட இந்தியா மற்றும் பாகிஸ்தான் போருக்கு மத்தியஸ்தம் செய்வதாக கூறிய அமெரிக்கா இந்தியாவுக்கு ஆதரவாக இருக்க மறுத்துவிட்டது. இதன் காரணமாக தான் பாதுகாப்புக்காக இந்தியா, ரஷ்யா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளை கூட்டாளிகளாக தேர்வு செய்கிறது என்று அவர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க : தமிழகத்தில் முக்கிய கோயில்களில் திருடப்பட்ட 3 சுவாமி சிலைகள்… திருப்பி தர அமெரிக்கா சம்மதம்

நிபந்தனையற்ற ஆதரவை எதிர்ப்பார்க்க கூடாது – அமெரிக்க அதிகாரிகள்

இது குறித்து அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, வாஷிங்டனின் தேசிய நலன்களை அடிப்படையாக கொண்டே தங்களின் முடிவுகள் எடுக்கப்படும் என்று அமெரிக்கா அதிகாரிகள் இந்தியாவிடம் கூறியுள்ளனர். அமெரிக்காவின் இந்தோ – பசிபிக் கொள்கையில் இந்தியா மத்தியில் இருந்தாலும், பாகிஸ்தான் உடன் மோதல் சூழல் உருவாகும் பட்சத்தில் புது டெல்லி நிபந்தனையற்ற ஆதரவை எதிர்ப்பார்க்க கூடாது என்று அதிகாரிகள் தெளிவுப்படுத்தி உள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : ஆற்றுக்குள் கவிழ்ந்த பேருந்து.. 23 பேர் பலி.. வங்கதேசத்தில் பதறவைக்கும் சம்பவம்!

இந்தியா – பாகிஸ்தான் மோதலில் பாகிஸ்தானுக்கு உதவிய அமெரிக்கா

2019 ஆம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற மோதலின் போது, இஸ்லாமாபாத் இந்தியாவுக்கு எதிராக அமெரிக்காவின் எஃப்-16 ஃபால்கனை பயன்படுத்தியது. இது அமெரிக்காவின் அனுமதி இன்றி நடத்திருக்காது என்றும் விமர்சர்கள் கூறுகின்றனர்.

Follow Us
தன்னை கடித்த பாம்பை தைரியமாக பிடித்த முதியவர்
கேர்ள் ஃபிரெண்டுடன் லூட்டி அடிக்கும் குரங்கு - வைரல் வீடியோ
தன் உயிரையும் பொருட்படுத்தாமல் நாயை காப்பாற்றிய பெண்.. இணையத்தில் வைரல்..
தாயின் பக்கெட் லிஸ்டை நிறைவேற்றிய மகன்... இணையத்தில் வைரல்..