துருக்கியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ஒருவர் உயிரிழப்பு..
Turkey Earthquake: துருக்கியில் 6.1 அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு இருக்கக்கூடிய கட்டிடங்கள் குலுங்கியது. மேலும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துருக்கியில் மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.

கோப்பு புகைப்படம்
துருக்கி நிலநடுக்கம், ஆகஸ்ட் 11, 2025: துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் காரணமாக அங்கு இருக்கக்கூடிய கட்டிடங்கள் அனைத்தும் கடுமையாக குலுங்கினது. 6.1 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் மக்கள் பீதியில் வீட்டை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்குத் துருக்கியில் 11 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. துருக்கியின் உள்ளூர் நேரப்படி இரவு 7:15 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. வடமேற்கு துருக்கியில் இருக்கக்கூடிய சிந்திர்கி என்ற பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
துருக்கியை உலுக்கிய நிலநடுக்கம்:
6.1 அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் அங்கு இருக்கக்கூடிய பல கட்டடங்கள் தரைமட்டமானது. இதனால் சுமார் 29 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் ஒருவர் இடுபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளார். இஸ்தான்புல் மற்றும் அதனை சுற்றி இருக்கக்கூடிய நகரங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பாலிகேசிர் மாகாணத்தில் உள்ள பல்வேறு கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
மேலும் படிக்க: உக்ரைன் போர் முடிவுக்கு வருமா? ஆகஸ்ட் 15ல் டிரம்ப் – புதின் சந்திப்பு.. பரபரப்பு!
இது தொடர்பான மீட்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு துருக்கி நாட்டில் தென்மேற்கு பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சுமார் 53 ஆயிரம் பேர் உயிரிழந்தனர் வரலாறு காணாத இந்த நிலநடுக்கம் துருக்கி நாட்டையே புரட்டிப் போட்டது.
மேலும் படிக்க: இந்தியா உடன் வர்த்தக பேச்சுவார்த்தை கிடையாது – அதிபர் டிரம்ப் அதிரடி..
சமீபத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ரஷ்யாவில் கம்சட்கா பகுதியில் 8.7 லிட்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது இதனை தொடர்ந்து பசிபிக் தீவுகள் ரஷ்யா மற்றும் ஜப்பான் முழுவதும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது