200 பேரை பலி வாங்கிய காங்கோ சுரங்க விபத்து.. அதிர்ச்சி சம்பவம்!
200 Killed In Congo Mine Accident | காங்கோவில் ஏராளமான சட்டவிரோத சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த சுரங்கங்களில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் ஒரு சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 200 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

காங்கோ சுரங்க விபத்து
கின்ஷாஷா, மார்ச் 06 : கிழக்கு ஆப்ரிக்க (East Africa) நாடான காங்கோவில் (Congo) உள்ள ஒரு சுரங்கத்தில் விபத்து ஏற்பட்டு ஏராளமானோர் பலியாகியுள்ளனர். ஏற்கனவே 2025, டிசம்பர் மாதத்தில் இந்த சுரங்கத்தில் விபத்து ஏற்பட்டு 100 பேர் பலியாகினர். தற்போது இரண்டாவது முறையாக இந்த சுரங்கத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், காங்கோ சுரங்க விபத்து குறித்து விரிவாக பார்க்கலாம்.
காங்கோவில் மீண்டும் ஒரு சுரங்க விபத்து – 200 பேர் பலி
கிழக்கு ஆப்ரிக்க நாடான காங்கோவில் ஏராளமான சட்டவிரோத சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த சுரங்கங்களில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவது வழக்கமாக உள்ளது. குறிப்பாக ருபாயா நகரில் எம் 23 கிளர்ச்சியாளர்கள் கட்டுபாட்டில் இருந்த கோல்டன் கனிம சுரங்கத்தில் 2025, டிசம்பர் மாதம் மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சுமார் 100 பேர் பரிதாபமாக பலியாகினர்.
இதையும் படிங்க : போருக்கு மத்தியில் ஈரானை உலுக்கிய லேசான நிலநடுக்கம்.. 4.3 ரிக்டராக பதிவு!
மீண்டும் அதே சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்து
இந்த நிலையில், தற்போது மீண்டும் அதே சுரங்கத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த சுரங்கத்திற்கு அருகே பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு தொழிலாளர்கள், வியாபாரிகள், விற்பனையாளர்கள், பெண்கள் மற்றும் குழந்தை உள்ளிட்ட ஏராளமானோர் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்பதற்கான தீவிர பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க : நீரிணையை கடக்கும் கப்பல்களை தாக்குவோம்.. ஈரான் பரபரப்பு அறிவிப்பு!
இந்த விபத்தில் இதுவரை சுமார் 200 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஏராளமானவர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளதால் மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.