இலங்கையில் ருத்ரதாண்டவம் ஆடிய ‘தித்வா புயல்’.. பலியானோர் எண்ணிக்கை 123 ஆக உயர்வு.. 130 பேர் மாயம்!!

Operation Sagar Bandhu: நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு உதவுவதற்காக இந்தியா, 'ஆபரேஷன் சாகர் பந்து'வைத் தொடங்கியுள்ளது.மேலும் இந்திய கடற்படையின் விமானம் தாங்கிக் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் மற்றும் ஐஎன்எஸ் உதய்கிரி மூலம் அந்நாட்டிற்கு 21 டன் நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன.

இலங்கையில் ருத்ரதாண்டவம் ஆடிய ‘தித்வா புயல்’.. பலியானோர் எண்ணிக்கை 123 ஆக உயர்வு.. 130 பேர் மாயம்!!

வெள்ளத்தில் மூழ்கிய இலங்கை

Updated On: 

29 Nov 2025 12:46 PM

 IST

இலங்கை, நவம்பர் 29: தித்வா புயலால் இலங்கையில் வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் ஏற்பட்ட பேரிடர்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 120க்கும் மேலாக அதிகரித்துள்ளது. திரும்பும் திசையெங்கும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளதால், 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முகாம்களில் அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து, கொட்டித் தீர்க்கும் அதி கனமழையால் இதுவரை 600க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. தொடர்ந்து, மலைப் பகுதிளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். தலைநகர் கொழும்பில் ஏராளமான மரங்கள் சாய்ந்து விழுந்துள்ளது, நகரின் பல முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் சாலைகள் மூடக்கப்பட்டு, கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிக்க: இலங்கையில் இடைவிடாது கொட்டித் தீர்க்கும் கனமழை.. விமானங்களை இந்தியாவுக்கு திருப்பிவிட முடிவு!

ஒரு வாரமாக நீடிக்கும் கனமழை:

இலங்கையில் உருவான தித்வா புயல் சின்னம் காரணமாக அங்கு மோசமான வானிலை நிலவி வருகிறது. இதனால், கடந்த ஒரு வாரமாக அங்கு பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால், பல்வேறு பகுதிகளிலும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. அதோடு, பல பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இலங்கை தலைநகரான கொழும்பு மழைநீரால் பெரியளவில் பாதிப்பை சந்தித்துள்ளது. அங்கு ஏராளமான வீடுகள் மண் சரிவால் பாதிக்கப்பட்டுள்ளது. மட்டகளப்பு, திரிகோணம் மலைப்பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக உள்ளது.

பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு:

இதனால், இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நேற்று முழுவதும் இலங்கையே இருள் சூழ்ந்து காணப்பட்டது. மின்சாரம் இல்லாததால் செல்போனுக்கு சார்ஜ் போட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதில், கடலோர மாவட்டங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மீனவர்கள் யாரும் மீன்படிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

‘அதி கனமழை’ தொடரும் ரெட் அலர்ட்:

இலங்கையில் இருந்து இந்தியா நோக்கி தித்வா புயல் நகர்ந்து வரும் நிலையிலும், அங்கு அதி கனமழை பெய்து வருகிறது. இதனால், அங்கு 600க்கும் மேற்பட்ட வீடுகளும், நூற்றுக்கணக்கான கார்களும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுள்ளன. இப்படி, இலங்கை முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. திரும்பும் திசையெல்லாம் மழைநீர் சூழ்ந்து, சாலைகள் துண்டிக்கப்பட்டு காணப்படுகிறது. இதனால், மீட்பு பணிகளிலும் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

Also Read : டன் டன்னாக தங்கம்.. சத்தமில்லாமல் வாங்கும் சீனா?! எதிர்கால திட்டம் இதுதானா?

சாகர் பந்து திட்டம் மூலம் இலங்கைக்கு நிவாரணம்:

இதனிடையே, புயலால் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ள இலங்​கைக்கு சாகர் பந்து திட்டத்தின் கீழ் நிவாரணப் பொருட்​கள் மற்​றும் மனி​தாபி​மான உதவி​களை இந்​தியா விரைந்து அனுப்​பி​யுள்​ளது. அதோடு, அங்கு வெள்​ளம் பாதித்த மாவட்டங்​களில் இந்திய கடற்படையின் விமானம் தாங்கிக் கப்பலான ஐஎன்​எஸ் விக்​ராந்த் சென்று நிவாரண பொருட்களை வழங்கி வருகிறது.

 

Related Stories
உடனே வெளியேறுங்கள்… ஈரானில் வன்முறை போராட்டங்கள் தீவிரம் – பயணத்தை தவிர்க்க இந்தியர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல்.. ரஷ்யா கடும் எச்சரிக்கை.. என்ன நடக்கிறது?
பாலக் பன்னீரால் உண்டான பிரச்சனை.. 2 இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேறிய சம்பவம்.. நஷ்ட ஈடு வழங்கிய பல்கலைக்கழகம்..
ஈரான் உடன் வணிகம் செய்யும் நாடுகளுக்கு 25% வரி.. இந்தியா மீதான வரி 75% ஆக உயருகிறது?
“நீ இறந்து விட்டாயா”…இளைஞர்கள் மத்தியில் பிரபலமான செல்போன் செயலி…என்ன அது!
அரிய கனிமங்களைப் பாதுகாப்பதே இலக்கு.. G7 கனிமங்கள் அமைச்சர்கள் கூட்டத்தில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் திட்டவட்டம்..
ஜப்பானில் முடிக்காக அர்ப்பணிக்கப்பட்ட கோயில்.. எங்கே இருக்கு தெரியுமா?
வாகன ஓட்டியை தாக்கிய போக்குவரத்து காவலர் - வீடியோ வெளியாகி அதிர்ச்சி
அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட நபர்.... 50 சதவிகித வாய்ப்பு - துரிதமாக செயல்பட்டு உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்கள்
திருடப்பட்ட செல்போனை தொழில்நுட்ப உதவியுடன் கண்டறிந்த இளம்பெண்