அமைச்சரவை கூட்டத்தில் நடந்தது என்ன? அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார் விளக்கம்..
அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, நடைபெற்று முடிந்த அமைச்சரவை கூட்டத்தில் தொலைநோக்கு திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஒவ்வொரு துறைக்கும் என்னென்ன இலக்கு, எதை நோக்கி பயணிக்க வேண்டும் என்பது குறித்து இந்த அமைச்சர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. முதல்வர் வழங்கிய தொலைநோக்கு திட்டங்களை எவ்வளவு நாட்களில் செயல்படுத்த வேண்டும் என்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இளைஞர்கள் மேம்பாடு, மகளிர் மேம்பாடு, விவசாயிகள் வளர்ச்சி, மீனவர்கள் வளர்ச்சி, போதையில்லாத தமிழகம் உள்ளிட்ட அனைத்து துறைகளின் தொலைநோக்கு திட்டங்கள் குறித்து இந்த அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, நடைபெற்று முடிந்த அமைச்சரவை கூட்டத்தில் தொலைநோக்கு திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஒவ்வொரு துறைக்கும் என்னென்ன இலக்கு, எதை நோக்கி பயணிக்க வேண்டும் என்பது குறித்து இந்த அமைச்சர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. முதல்வர் வழங்கிய தொலைநோக்கு திட்டங்களை எவ்வளவு நாட்களில் செயல்படுத்த வேண்டும் என்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இளைஞர்கள் மேம்பாடு, மகளிர் மேம்பாடு, விவசாயிகள் வளர்ச்சி, மீனவர்கள் வளர்ச்சி, போதையில்லாத தமிழகம் உள்ளிட்ட அனைத்து துறைகளின் தொலைநோக்கு திட்டங்கள் குறித்து இந்த அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தேர்தல் வாக்குறுதிகளுடன் சேர்த்து அனைத்து துறைகளிலும் மொத்தமாக 436 திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் முழுவதையும் ஆராய்ந்து அதனை எவ்வாறு முழுமையாக செயல்படுத்துவது என்பதை ஆராய்ந்து முழு வடிவிலான திட்ட வடிவங்கள் கொண்டு வந்து முதல்வரின் உத்தரவின் பெயரில் துறை வாரியான அமைச்சர்கள் அதனை செயல்படுத்துவார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
