மதுரை வீரமாகாளி அம்மன் கோயில் திருவிழா.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலம்..
மதுரை ஜெயந்திபுரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வீரமாகாளி அம்மன் திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசித்து வழிபட்டு வருகின்றனர். இந்த நிலையில், கோவிலின் ஆண்டு திருவிழா தற்போது வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தி வருகின்றனர்.

இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மற்றும் வைகாசி மாதங்களில் உற்சவ விழாக்கள் சிறப்பாக நடத்தப்படுவது வழக்கம். குறிப்பாக விழா நாட்களில் பக்தர்கள் பால்குடம் எடுத்து, அலகு குத்தி, பறவை காவடி ஏந்தி அம்மனை பக்தி பரவசத்துடன் வழிபடுவார்கள். அந்த வகையில், இன்றைய தினம் நடைபெற்ற திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். மேலும், பலர் காவடி ஏந்தியும் தங்களது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றியும் அம்மனை வழிபட்டனர்.