AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
மனைவியின் நடத்தையில் சந்தேகம்.. மகள்களை கழுத்தை அறுத்து கொலை செய்த தந்தை!

மனைவியின் நடத்தையில் சந்தேகம்.. மகள்களை கழுத்தை அறுத்து கொலை செய்த தந்தை!

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 19 Apr 2026 23:37 PM IST

Man Killed His Two Daughters In UP | உத்தர பிரதேசத்தில் மனைவி மீது ஏற்பட்ட சந்தேகம் காரணமாக கணவன் தனது 11 வயது இரட்டை மகள்களை கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

லக்னோ, ஏப்ரல் 19 : உத்தர பிரதேச (UP – Uttar Pradesh) மாநிலம், கான்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சசி ரஞ்சன் மிஸ்ரா. 48 வயதாகும் இவருக்கு திருமணமாகி ரேஷ்மா என்ற மனைவியும், 6 வயதில் ஒரு ஆண் குழந்தையும், 11 வயதில் இரண்டு இரட்டை பெண் குழந்தைகளும் இருந்துள்ளனர். இந்த நிலையில், மனைவியின் நடத்தை மீது சந்தேகமடைந்த சசி ரஞ்சன் தனது இரட்டை பெண் குழந்தைகளை கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார். இந்த கொடூர கொலை சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

இரட்டை பெண் குழந்தைகளை கொலை செய்த தந்தை

சசி ரஞ்சனுக்கு, தனது மனைவி வேறு ஒரு ஆணுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. இதன் காரணமாக அவர் அடிக்கடி ரேஷ்மாவுடன் சண்டையிட்டு வந்துள்ளார். மேலும், வீட்டிற்குள் சிசிடிவி கேமராக்களை பொருத்தி தனது மனைவியின் நடவடிக்கைகளை அவர் கண்காணித்து வந்துள்ளார். அதுமட்டுமன்றி, அவர் தனது மனைவியிடம் நீ மகனுடன் பிரிந்து சென்றுவிடு, நான் மகள்களை வளர்த்துக்கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : 5 வயது பேத்தியை சுட்டெரிக்கும் வெயிலில் கட்டிப்போட்ட பாட்டி.. அதிர்ச்சி சம்பவம்!

மகள்களின் கழுத்தை அறுத்து கொலை செய்த தந்தை

கடும் மன அழுத்தத்தில் இருந்த சசி ரஞ்சன், தனது மகள்களின் அறைக்கு கூட தனது மனைவியை அனுமதிக்காமல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், சம்பவத்தன்று அவர் தனது மகள்களுடன் படுத்து தூங்கிக்கொண்டு இருந்த நிலையில், அதிகாலை 2.30 மணி அளவில் வீட்டில் இருந்த கத்தியை கொண்டு தனது இரண்டு மகள்களையும் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.

இதையும் படிங்க : ஒரு பெண்ணை திருமணம் செய்ய ஊர்வலம் வந்த இரண்டு மாப்பிள்ளைகள்..உபியில் ஷாக் சம்பவம்!

பின்னர் அவரே காவல்துறையை தொடர்ப்புக்கொண்டு தனது மகள்களை கொலை செய்துவிட்டதாக கூறியுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், குழந்தைகள் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். அவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதானைக்காக அனுப்பி வைத்த போலீசார், சசி ரஞ்சனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Published on: Apr 19, 2026 04:35 PM
Follow Us