Viral Video : குப்பை போட போர்ட்டர் புக் செய்த இளம் பெண்.. இணையத்தை கோபமடைய செய்த வீடியோ!
Young Woman Booked Porter To Dispose Garbage | இணையத்தில் ஒவ்வொரு நாளும் இணையத்தில் பல வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில் பெண் ஒருவர் குப்பை போட போர்ட்டர் புக் செய்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வைரல் வீடியோ
சமூக ஊடகங்கள் மற்றும் ஸ்மார்ட்போன்களின் உதவியால் உலகை சுற்றி நடைபெறும் சுவாரஸ்ய மற்றும் வித்தியாசமான சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், இளம் பெண் ஒருவர் போர்ட்டரை புக் செய்து குப்பை போட வைத்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது. அந்த பெண்ணின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து பலரும் கருத்து பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
போர்ட்டர் புக் செய்து குப்பை போட சொன்ன இளம் பெண்
பொதுமக்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு விரைவாக அழைத்துச் செல்ல ஓலா, ஊபர் உள்ளிட்ட பயண செயலிகள் உள்ளதை போலவே பொருட்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டுச் செல்ல பயன்படுவதுதான் இந்த போர்டர் சேவை. ஏராளமான பொதுமக்கள் இந்த சேவையை பயன்படுத்தி பொருட்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டுச் செல்கின்றனர். ஆனால், இளம் பெண் ஒருவர் இந்த சேவையை தவறாக பயன்படுத்தியது தொடர்பான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : Viral Video : கொட்டும் வெள்ளை பனியில் திருமணம்.. இணையத்தை கவர்ந்த வீடியோ!
இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ
Woman used Rapido’s porter service to send a sealed package. However, what the delivery boy found in the package when he reached the drop location left him confused and shocked.#rapido #porter #deliveryman #viralvideo #trending #latest #news pic.twitter.com/gN2N2CMFBc
— Manchh (@Manchh_Official) February 5, 2026
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் போடர் டெலிவரி ஊழியர் தனக்கு ஆர்டர் புக் செய்யப்பட்ட இடத்திற்கு செல்கிறார். அங்கிருக்கும் இளம் பெண் ஒருவர் அவரிடம் ஒரு அட்டை பெட்டியை கொடுக்கிறார். அதில் ஏதோ பொருட்கள் இருப்பது போல அவர் கயிறு கட்டி கொடுக்கிறார். அதனை வாங்கிக்கொண்டு அந்த ஊழியர் தனது ஸ்கூட்டரை ஓட்டுகிறார். சிறிது தூரத்தில் அந்த பெண் போர்டர் புக் செய்த இடம் வந்துவிடுகிறது. இதனால் குழப்பமடைந்த அந்த நபர் அந்த பெண்ணுக்கு போன் செய்து கேட்கிறார். அதற்கு அந்த பெண் அதில் குப்பை தான் உள்ளது அதனை அங்கே வீசிவிடுங்கள் என்று கூறுகிறார். அந்த நபரும் அவர் கூறியபடியே குப்பையை அங்கு வீசுகிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.