Viral Video : சன் கேண்டில்.. சூரிய ஒளியில் மின்னிய பனி துகல்கள்.. ஆச்சர்யத்தை ஏற்படுத்திய வீடியோ!
Viral Video Shows Rare Sun Candle Illusion | இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், சூரிய ஒளியில் பனி துகல்கள் மின்னும் வீடியோ இணையத்தில் வைரலாகி பயனர்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

சன் கேண்டில்
இந்த உலகம் தன்னுள் பல்வேறு அதிசயங்களை கொண்டுள்ளது. அந்த வகையில் உலகில் நடைபெறும் பல்வேறு வித்தியாசமான மற்றும் வியக்கத்தக்க வீடியோக்கள் ஒவ்வொரு நாளும் இணையத்தில் வெளியாகி வைரலாகும். தற்போது அத்தகைய வீடியோ ஒன்றுதான் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ காண்போரை வியப்பில் ஆழ்த்தும் வகையில் உள்ளது. அப்படி அந்த வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சன் கேண்டில் – இணையத்தை ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கிய வீடியோ
தற்போது உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மிக கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. வீடுகள், வீதிகளை வெள்ளை பனி போர்வை போர்த்தி இருப்பது, ஏரிகள், குளங்கள் பனியில் உறைந்திருப்பது தொடர்பான வீடியோக்கள் பல சமீப காலமாக இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில், சூரிய ஒளி பட்டு பனி துகள்கள் மின்னும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க : Viral Video : ஸ்விக்கியில் உணவு ஆர்டர் செய்த பிச்சைக்காரர்.. இணையத்தை ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கிய வீடியோ!
இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் மரங்கள் அடர்ந்த பகுதியில் வெள்ளை பனி கொட்டுகிறது. அப்போது மரங்களுக்கு இடையே உள்ள காலி இடத்தில் பனி துகல்கள் காற்றில் பறக்கும் நிலையில், அது சூரிய ஒளி மின்னுகிறது. அதனை பார்ப்பதற்கு மெழுகி திரி போல தோன்றுகிறது. இதனை தான் சன் கேண்டில் என கூறுகின்றனர். இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : Viral Video : சுடுகாட்டில் இருந்து உணவு டெலிவரி செய்த பெண்.. திகிலில் உறைந்த டெலிவரி ஊழியர்!
இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், அதனை பார்ப்பதற்கு சொர்கத்தின் வாசல் போல தோன்றுகிறது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.