Viral Video : மகள்களை தூக்கத்தில் இருந்து எழுப்ப Band வைத்த தாய்.. இணையத்தை கலக்கும் வீடியோ!

Mother Hires Band to Wake Daughters | இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. அந்த வகையில், தாய் ஒருவர் தனது மகள்களை தூக்கத்தில் இருந்து எழுப்ப பேண்ட் இசை கலைஞர்களை வரவழைத்த வீடியோ வைரலாகி வருகிறது.

Viral Video : மகள்களை தூக்கத்தில் இருந்து எழுப்ப Band வைத்த தாய்.. இணையத்தை கலக்கும் வீடியோ!

வைரல் வீடியோ

Published: 

26 Oct 2025 14:10 PM

 IST

ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமூக ஊடகங்களின் உதவியால் உலகை சுற்றி நடைபெறும்ம் சுவாரஸ்ய சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், தாய் ஒருவர் தனது மகள்களை தூக்கத்தில் இருந்து எழுப்ப பேண்ட் வைத்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மகள்களை தூக்கத்தில் இருந்து எழுப்ப பேண்ட் வைத்த தாய்

பிள்ளைகளை தூக்கத்தில் இருந்து எழுப்ப இந்திய தாய்களை அடித்துக்கொள்ளவே முடியாது. முகத்தின் தண்ணீர் ஊற்றுவது, மின்விசிரியை அனைத்து விட்டு செல்வது, போர்வையை உருவி செல்வது என பல வகையில் இந்திய தாய்மார்கள் தங்களது பிள்ளைகளை எழுப்புவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால், ஒரு தாய் மிகவும் வித்தியாசமாக தனது மகள்களை தூக்கத்தில் இருந்து எழுப்பி மிகவும் பேசுபொருளாக மாறியுள்ளார். அதாவது, தனது மகள்களை தூக்கத்தில் இருந்து எழுப்ப அவர் உள்ளூரில் இருந்து பேண்ட் கலைஞர்களை வரவழைத்துள்ளார். இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : Viral Video : ரயில் டிக்கெட்டுக்கு பதில் ஆதார் கார்டை காண்பித்த மூதாட்டி.. TTE செய்த செயல்!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் பேண்ட் கலைஞர்கள் படி வழியே ஏரி மாடிக்கு செல்கின்றனர். பிறகு அவர்கள் ஒரு அறைக்குள் சென்று வாசிக்க தொடங்குகின்றனர். அந்த அறையில் இரண்டு இளம் பெண்கள் தூங்கிக்கொண்டு இருக்கின்றனர். அவர்களை எழுப்புவதற்காக அவர்களின் தான் பேண்ட் வைத்த நிலையில், அந்த மகள்கள அதனை கண்டுக்கொள்ளாமல் இழுத்து போர்த்திக்கொண்டு தூங்குகின்றனர். பிறகு ஒரு மகள் எழுந்து சிறிக்கிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க : Viral Video : தீபாவளிக்கு சோன் பப்டி கொடுத்த நிறுவனம்.. ஆத்திரத்தில் வீசி சென்ற ஊழியர்கள்!

வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து

இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், இந்த ஆண்டின் சிறந்த தாயு இவர் தான் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.