Viral Video: பயமில்லாமல் பாம்புடன் விளையாடும் சிறுவன் – மெய் சிலிர்க்க வைக்கும் வீடியோ

Shocking Viral Video : சிறுவன் ஒருவன் பாம்புடன் விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரையும் ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. 13 வினாடி வீடியோவில், அந்த சிறுவன் விஷப் பாம்பை விழுங்க முயற்சிக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. இது பெற்றோர் கவனக்குறைவைச் சுட்டிக்காட்டுவதாக நெட்டிசன்கள் விமர்சிக்கின்றனர்.

Viral Video: பயமில்லாமல் பாம்புடன் விளையாடும் சிறுவன் - மெய் சிலிர்க்க வைக்கும் வீடியோ

பாம்புடன் விளையாடும் சிறுவன்

Published: 

28 Jun 2025 20:12 PM

 IST

சமூக வலைதளங்களின் (Social Media) வருகைக்கு பிறகு உலகில் எங்கோ ஒரு மூலையில் நடைபெறும் சம்பவங்களை கூட வீட்டில் இருந்த படியே பார்க்க முடிகிறது. அதிக கவனம் பெறாத பகுதிகள் கூட சமூக வலைதளங்களினால் மக்களிடையே வைரலாகிறது. அதற்கு சமீபத்திய  உதாரணம் விருதுநகர் மாவட்டம் கூமாபட்டி. விருதுநகர் மாவட்ட மக்களுக்கு கூட தெரியாத ஊர் இன்று உலக அளவில் டிரெண்டாகியிருக்கிறது. அதற்கு சமூக வலைதளம் மிகப்பெரும் காரணம். அந்த வகையில் சமீபத்தில் வைரலான ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் சிறுவன் ஒருவன், விஷ பாம்புடன் விளையாடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ மக்களிடையே பெரும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த 13 வினாடி மட்டுமே உள்ள வீடியோ, ஒரு பக்கம் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் மறுபுறம் அந்த சிறுவனம் பயமில்லாமல் பாம்புடன் விளையாடும் காட்சிகள் மக்களிடையே பெரும் ஆச்சரியத்தையும் சிரிப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது, மஞ்சள் நிற டி-சர்ட் அணிந்த ஒரு சிறுவன் தரையில் அமர்ந்திருப்பதையும், அவனுக்கு முன்னால் ஒரு பெரிய பாம்பு இருப்பதையும் காணலாம். அது ஒரு நாகப்பாம்பாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த வீடியோவில் சிறுவன் பாம்புடன் விளையாடிக்கொண்டிருக்கும் போது திடீரென அதனை விழுங்க முயற்சிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.இது மக்களிடையே மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. வீடியோவில், சிறுவன் திடீரென முன்னோக்கி சாய்ந்து தனது வாயால் பாம்பை பிடிக்க முயற்சிப்பதைக் காணலாம். அதே நேரத்தில், ஆபத்தை உணர்ந்த பாம்பு உடனடியாக பின்வாங்குகிறது.

பாம்புடன் சிறுவன் விளையாடும் வீடியோ வைரல்

அந்த சிறுவன் இதை ஒரு முறை, இரண்டு முறை அல்ல, மூன்று முறை செய்கிறான். ஒவ்வொரு முறையும் பாம்பு அவனிடமிருந்து தப்பிக்க பின்வாங்குகிறது. பாம்பு குழந்தையைத் திருப்பி தாக்கவில்லை என்பது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.  ஒரு பக்கம் இந்த வீடியோ பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும் மற்றொரு பக்கம் பெற்றோர்கள் குறித்து கேள்வி எழுப்புகின்றனர். குறிப்பாக நெட்டிசன்கள் மத்தியில் மிகுந்த கவலையும் கோபத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த வீடியோவை ‘ஜெசாக் சி ஈடன் ரியல்’ என்ற பேஸ்புக் பயனர் பகிர்ந்திருந்தார். மேலும், அவரது வீடியோவிற்கு கேப்ஷனாக பாம்பு ஆபத்தில் உள்ளது என்று குறிப்பிட்டிருக்கிறார். அவரது பதிவிற்கு வீடியோவைப் பார்த்த பிறகு, பெரும்பாலான நெட்டிசன்கள் இந்த சூழ்நிலை குழந்தைக்கு ஆபத்தாக முடியலாம், இது போன்ற வீடியோக்களை பார்க்கும்போது மற்ற குழந்தைகளும் பாம்புகளைப் பார்த்து பயப்படுவதற்கு பதிலாக விளையாடத் தொடங்குவார்கள். இது அவர்களுக்கு பெரும் பிரச்னைகளை ஏற்படுத்தலாம் என்று கமெண்ட் செய்திருக்கின்றனர். மற்றொரு பயனர், வீடியோவில் ஆபத்தில் இருப்பது பாம்பு அல்ல, குழந்தைதான் என்று நக்கலாக குறிப்பிட்டுள்ளார்.

Follow Us
ஈரான் - இஸ்ரேல் போர் பரபரப்பு: 4 வாரங்களுக்கு டிவி செய்தி சேனல்களின் TRP வெளியீடு நிறுத்தம்
ஷோலே படக் காட்சி போல சம்பவம்… காதலனை விடுவிக்க மொபைல் டவரில் ஏறிய இளம்பெண்!
போர் விமான விபத்து.. இந்திய விமானப்படை விமானி வீரமரணம்..
நவீனகால திருமணங்கள்.. பழமை மாறாத சிந்தனை..